சோதனையான நேரத்தில் உயிர்கள் அனைத்திற்கும் உணவளிப்போம்

By Staff

Published:

9e6ac91cb0d6550c3a8a9434c61f76ce

தற்போது கொரோனா வைரஸ் தலைவிரித்தாடுவதால் எல்லா மாநில அரசுகளும் கடுமையான லாக் டவுன் முறையை கொண்டு வந்துள்ளது. இதனால் உணவகங்கள் டீக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. திருமண மண்டபங்கள் போன்றவையிலும் திருமணங்கள் எதுவும் நடைபெறாத நிலையில் தெருவோர விலங்குகளின் உணவுத்தேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.

ஹோட்டல்களிலும், திருமண மண்டபங்களிலும், டீக்கடைகளிலும்  இருந்து கொட்டப்படும் எச்சில் கழிவுகளே இவைகளுக்கு உணவாக இருக்கிறது. இதனால் பல விலங்கினங்கள் பசியால் வாடி உயிர் துறக்கிறது.

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய பசிப்பிணி போக்கிய வள்ளலார் வாழ்ந்த பூமி இது. பசியால் வாடும் எந்த ஒரு உயிருக்கு செய்யும் நன்மையும் நமக்கு தகுதியான நேரத்தில் நல்ல பலன்களை கொடுக்கும்.

ஒடிசாவில் இது போல தெருவோர விலங்குகளுக்கு லாக் டவுன் நேரத்தில் உணவளிப்பதற்காகவே 60 லட்சம் நிதியை அம்மாநில முதல்வர் ஒதுக்கியுள்ளார்.

அதுபோல் எல்லா மாநில அரசுகளும் செய்யாவிட்டாலும் தனி மனிதர்கள் விலங்குகளுக்கு உணவிடுவதை செய்யலாம். மற்ற நேரத்தில் பல லட்சம் செலவு செய்து நானும் அன்னதானம் செய்கிறேன் பார் என புகைப்படம் எடுத்து பெருமைக்காக பலர் செய்வதை விட இது போல நேரத்தில் ஆதரவற்ற பசியால் வாடும் தெருவிலங்குகளுக்கு உதவி செய்தால் இறைவனின் நேரடி கட்டுப்பாட்டில் நீங்கள் வருவீர்கள். இறை அருளால் உங்கள் கர்மவினை சார்ந்த விசயங்கள் நீங்கி வாழ்வில் மகிழ்ச்சியடைவீர்கள்.

உண்மையில் பசியோடு இருக்கும் ஒரு ஆதரவற்ற உயிருக்கு உதவுவது உங்களுக்கு இப்போ இல்லாவிட்டாலும் வாழ்வில் எப்பொழுதாவது அளப்பறிய நன்மைகளை சேர்க்கும்.

Leave a Comment