விரும்பிய அனைத்தும் ஈடேற ஸ்ரீராகவேந்திரர் மந்திரம்..

கஷ்டம் வரும்போது இறைவனை நினைப்போம். கஷ்டம் தீர்ர்ந்தபிறகு இறைவனை கண்டுக்க மாட்டோம். சந்தோசமான தருணத்திலும் இறைவனுக்கு நன்றி சொல்வது நம்மில் எத்தனை பேர்?! நமது கஷ்டங்களை இறைவனிடத்தில் மட்டுமல்லாமல் இறைதூதர்களிடமும், சித்தர் புருசர்களிடமும், மனித…

கஷ்டம் வரும்போது இறைவனை நினைப்போம். கஷ்டம் தீர்ர்ந்தபிறகு இறைவனை கண்டுக்க மாட்டோம். சந்தோசமான தருணத்திலும் இறைவனுக்கு நன்றி சொல்வது நம்மில் எத்தனை பேர்?! நமது கஷ்டங்களை இறைவனிடத்தில் மட்டுமல்லாமல் இறைதூதர்களிடமும், சித்தர் புருசர்களிடமும், மனித உருவில் வாழ்ந்த மகான்களிடமும் சொல்லலாம். அவர்கள் நமக்காக கடவுளிடம் வேண்டுவர்கள். மனித உருவில் வாழ்ந்த மகான்களில் புத்தர், ராகவேந்திரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகாந்தர், ரமணர்.. மாதிரியானவர்கள்.

இவர்கள் நம்மைவிட்டு மறைந்தாலும், அவர்களது ஆன்மா நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தும். நமக்காக இறைவனிடம் தூது செல்லும்.

ஸ்ரீஇராகவேந்திரர் மந்திரம்…

ஓம் வெங்கட நாதாய வித்மஹே

ஸச் சித்தானந்தாய தீமஹி

தந்நோ ராகவேந்திரா ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தினை மகான்கள் மற்றும் சித்தர்களை வழிபடுவதற்குரிய வியாழக்கிழமைகளில் வழிபடுவது சிறப்பு என்றாலும் வாரத்தின் மற்ற எல்லா நாட்களிலும் கூறி வழிபடலாம். காலையில் எழுந்து, குளித்து உடல் மனத்தூய்மையோடு பூஜையறையில் ராகவேந்திரர் படமிருந்தால் அதற்கு முன்பு மஞ்சள் நிற பூக்களை வைத்து, விளக்கேற்றி, வடதிசையை பார்த்தவாறு அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டு தியான நிலையில், ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் நினைத்து இம்மந்திரத்தை 108 முறை என தொடர்ந்து 48 நாட்கள் சொல்லிவர நீங்கள் விரும்பியவற்றை நிறைவேற்றுவார் ஸ்ரீ ராகவேந்திரர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன