முழுமுதல் கடவுளாம் விநாயகரை வணங்கிய பிறகே எந்தவொரு செயலையும் செய்வது நமது வழக்கம்… வளர்பிறையில் ஒன்று, தேய்பிறையில் ஒன்று என மாதந்தோறும் இரண்டு சதுர்த்தி வரும். ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தியில் விநாயகர் அவதரித்ததால் அந்நாளை விநாயகர் சதுர்த்தியாக உலகம் முழுக்க கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடத்தைய விநாயகர் சதுர்த்தி ஆகஸ்ட் 22ம்தேதி சனிக்கிழமை அன்று கொண்டாடப்பட இருக்கிறது.
இறைவனை எந்த நேரத்திலும் தொழலாம் என்பதில் மாற்று கருத்தில்லையென்றாலும், நல்ல நேரத்தில் இறைவனை வணங்கினால் மேலும் நற்பலன்களை பெறலாம்… விநாயகர் பூஜை செய்ய உகந்த நல்ல நேரம்…
காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
கெளரி நல்ல நேரம்
காலை 10.45 மணி முதல் 11.45 மணி வரை
இரவு 09.30 மணி முதல் 10.30 மணி வரை
இந்த நேரத்தில் இறைவனை வணங்கி நற்பலன் பெறுவோம்…