வினைகள் அனைத்தும் ஓடும் – தேவாரப்பாடலும், விளக்கமும்..

பாடல்.. வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினைஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே. விளக்கம் மேருவாகிய வில்லை வளைத்துத் திரிபுரத்தசுரர் களுடைய மும்மதில்களை அழித்தவன் எழுந்தருளிய தில்லை நகரின்…


203b68da2a8685ccaf989c843846f959-1

பாடல்..

வில்லை வட்டப் படவாங்கி யவுணர்தம்
வல்லைவட் டம்மதில் மூன்றுடன் மாய்த்தவன்
தில்லைவட் டந்திசை கைதொழு வார்வினை
ஒல்லைவட் டங்கடந் தோடுத லுண்மையே.

விளக்கம்

மேருவாகிய வில்லை வளைத்துத் திரிபுரத்தசுரர் களுடைய மும்மதில்களை அழித்தவன் எழுந்தருளிய தில்லை நகரின் திசையை நோக்கிக் கைகூப்புவார் செய்த வினைகள் விரைந்து அவர்களை விட்டு ஓடும். இஃது உண்மை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன