நெய் தீபம் ஏற்றுவது உத்தமம். அனைத்து தெய்வங்களுக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் நினைத்த காரியம் கைகூடும். தடைபட்ட காரியங்களில் எல்லாம் வெற்றி கிடைக்கும்.
தாமரை தண்டு திரி, பஞ்சு திரி, வெண்மையான திரி கொண்டு விளக்கு ஏற்றலாம். வீட்டில் மண், பித்தளை, வெள்ளி விளக்கு முதலியவற்றில் ஏற்றலாம். கடலை எண்ணெய் தீபம் ஏற்ற கூடாது. கடலை எண்ணெய் கொண்டு ஏற்றினால் சாபம் மற்றும் தோஷம் ஏற்படக்கூடும் என்பதால் அதனை தவிர்த்து விடுங்கள்.
தடைபட்ட திருமணம் கை கூட துர்கை அம்மன் கோவில்களில் இரண்டு விளக்கில் சிவப்பு வஸ்திரம் திரியாக செய்து விளக்கு ஏற்றலாம். பொதுவாக திருமணத் தடை, குடும்பத்தில் பிரிந்தவர்கள் ஒன்று சேர புதிய வஸ்திரம் கொண்டு சிவப்பு திரி செய்து விளக்கு ஏற்றலாம். பெரும்பாலும் அம்மன் கோவில்களில், முருக பெருமான் கோவில்களில் இந்த எளிய பரிகாரங்கள் செய்தால் விரைவில் மாலை சூடுவதற்கு இறைவன் அருள் புரிவார்.
இதையும் படியுங்கள்: வீட்டில் மயில் இறகு வைத்தால் தோஷம் நீங்குமா?
தீபத்தை வாயால் ஊதி அணைக்காமல் பூவின் காம்பால் அணைக்க வேண்டும். எவர்சில்வர் விளக்கை ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். விளக்கெண்ணெய் மற்றும் இலுப்பை எண்ணெய் வைத்தும் விளக்கு ஏற்றலாம்.
விளக்கு திரி வகைகள்
தீபத்திற்கு பஞ்சு திரி ஏற்றுவது சிறப்பானது. புதுவெள்ளை வஸ்திரம், புது மஞ்சள், வாழைத்தண்டு நூல், தாமரைத்தண்டு திரி, ஆகியவை பயன்படுத்தலாம்.
விளக்கு ஏற்ற வேண்டிய நேரம்
அதிகாலை நேரத்திலும், மாலை சூரியன் அஸ்தமனத்துக்கு முன்பும் வீட்டில் விளக்கு ஏற்றி வைக்க வேண்டும்.
நல்லெண்ணெய் தீபத்தின் சிறப்பு
சுத்தமான நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றினால் நினைத்த காரியங்கள் நடைபெறும். அனைத்து தெய்வங்களுக்கும் நல்லெண்ணெய் கொண்டு விளக்கு ஏற்றலாம்.
விளக்கேற்ற உகந்த எண்ணெய் வகைகள்
மஹாலக்ஷ்மி அருள் கிட்ட நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் நினைத்தது நடைபெறும். நாராயணன் அருள் கிட்ட நல்லெண்ணெய் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். விநாயக பெருமானுக்கு தேங்காய் எண்ணெய், ஸ்ரீதேவிக்கு ஐந்து வகை எண்ணெய் ஏற்றி வழிபட்டால் நன்மைகள் நடைபெறும். சர்வ தேவதைகளுக்கு நல்லெண்ணெய், ருத்திராதி தேவதைகளுக்கு இலுப்பை எண்ணெய் விளக்கு ஏற்றினால் நினைத்த காரியம் நடைபெறும்.