பக்தர்களை எழுந்து செல்ல விடாத வாரியார் ஸ்வாமிகளின் சாமர்த்திய சொற்பொழிவு

By Abiram A

Published:

அந்தக்காலங்களில் முருகன் கோவில்களில் சொற்பொழிவு என்றால் அது வாரியார் ஸ்வாமிகள்தான். முருகனை பற்றி வாரியார் ஸ்வாமிகளின் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

இவரின் மற்றொரு சிறப்பு என்னவென்றால் நகைச்சுவையாக பேசுவது, சிலேடையாக பேசுவது என வாரியார் ஸ்வாமிகளின் சொற்பொழிவு இருக்கும்.

இருப்பினும் வாரியார் ஸ்வாமிகள் கோவில் சொற்பொழிவுகளில் சில நேரம் நீண்ட நேரம் பேசுவார். அப்படி பேசும்போது பக்தர்கள் சிலர் எழுந்து சென்று கொண்டே இருப்பார்களாம். ஒருமுறை இப்படி பேசிக்கொண்டிருக்கும்போது அதிகமான பக்தர்கள் எழுந்து சென்று கொண்டே இருந்தார்களாம் இதை கவனித்த வாரியார் , ராமாயணத்தில் அனுமனுக்கு சொல்லின் செல்வர் என்று பெயர்.

இந்த ஊரிலும் அதிகமான சொல்லின் செல்வர்கள் உள்ளனர் என கூறி இருக்கிறார். எழுந்து சென்ற பக்தர்கள் அப்படியே கூர்ந்து கேட்க உங்களைத்தான் சொல்கிறேன் நான் சொல்லும்போது எழுந்து செல்கிறீர்கள் அல்லவா அதைத்தான் சொல்லின் செல்வர் என்கிறேன் என்று நகைச்சுவையாக கூறி இருக்கிறார்.

இப்படி சாமர்த்தியமாக ஆன்மிகமும் நகைச்சுவையும் தமிழ்ப்புலமையோடும் சொற்பொழிவு செய்தவர் வாரியார் ஸ்வாமிகள்.

Leave a Comment