வனதிருப்பதி கோவில் சரவணபவன் ஹோட்டல் நிர்வாகத்தினரால் கட்டப்பட்டது. சரவணபவன் ஹோட்டல் நிறுவனர் இந்த கோவிலை கட்டினார். தனியார் கோவில் என்றாலும் திருப்பதி போல இந்த கோவில் உள்ளது 3 பெருமாள் சிலைகளுடன் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. எங்கிருந்து பார்த்தாலும் தூரமாக நின்று பார்த்தாலும் கோவிலுக்குள் இருக்கும் பெருமாள் தெளிவாக துல்லியமாக தெரிவார்.
திருப்பதி சென்று பெருமாளை தரிசிக்க முடியாதவர்கள் அந்த அளவு உயரமுடைய இந்த பெருமாளை தரிசிக்கலாம். புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் செல்பவர்கள் திருச்செந்தூர் சாமி தரிசனம் முடித்து விட்டு இந்த கோவில் சென்று வரலாம்.
எப்போதும் பக்தர் கூட்டத்துடன் கோவிந்தா நாமத்துடன் பக்தர்கள் கூட்டம் இங்கு வருகிறது. சரவண பவன் நிர்வாகத்தினரால் பராமரிக்கப்படுவதால் அடிக்கடி திருப்பதி போல சுவையான நெய் மணக்கும் பொங்கல் மற்றும் பிரசாதங்கள் இங்கு கொடுக்கப்படுகிறது.
திருச்செந்தூரில் இருந்து தூத்துக்குடி சாலையில் வந்த உடனேயே இந்த ஊர் செல்வதற்கான வழிகாட்டும் ஃபோர்டை நீங்கள் பார்க்க முடியும். திருச்செந்தூரில் இருந்து 20கிமி தொலைவில், கட்சனவிலை அருகே இக்கோவில் உள்ளது.