வைணவ கடவுள்களுக்கு துளசி மாலை அணிவிப்பது ஏன்?!

சிவன் கோவிலுக்கு செல்லும்போது வில்வ மாலை சார்த்தி வழிபடுவதுபோல பெருமாள், கிருஷ்ணர், ராமர், லட்சுமி, அனுமன் மாதிரியான வைணவ கடவுள் கோவிலுக்கு செல்லும்போது துளசி மாலையை சார்த்தி வழிபடுவது வழக்கம். சாதாரண துளசி எப்படி…

சிவன் கோவிலுக்கு செல்லும்போது வில்வ மாலை சார்த்தி வழிபடுவதுபோல பெருமாள், கிருஷ்ணர், ராமர், லட்சுமி, அனுமன் மாதிரியான வைணவ கடவுள் கோவிலுக்கு செல்லும்போது துளசி மாலையை சார்த்தி வழிபடுவது வழக்கம். சாதாரண துளசி எப்படி இப்படி ஒரு பாக்கியம் பெற்றதென பார்க்கலாம்…

4fa2be46196e8dab60ad8d9f53f83bbd

தேவர்களும், அசுரர்களும் ஒன்றுகூடி பாற்கடலை கடைந்து அதிலிருந்து அமிர்தத்தைப் பெற முயன்றனர். அப்போது பாற்கடலிலிருந்து கற்பகத்தரு, ஐராவதம், காமதேனு, மகாலட்சுமி, சந்திரன், சங்கு ஆகியவை வெளிவந்தது. ஸ்ரீமகாவிஷ்ணுவின் ஆனந்தக்கண்ணீர் பெருகி, அந்த கண்ணீர்  துளி அமிர்த கலசத்தில் விழுந்தது. அக்கலசத்தின்றும் பச்சை நிற மேனியுடன் ஸ்ரீதுளசி மகாதேவி தோன்றினாள். மகாவிஷ்ணு துளசி, லட்சுமி, கவுதுஸ்பம் என்ற மூன்றை மட்டும் மகாவிஷ்ணு வைத்துக்கொண்டு ஏனையவற்றைத் தேவர்களுக்கு வழங்கி விட்டார்.

துளசி துண்டில் 33 கோடி தேவர்கள், 12 சூரியர், 8 வசுக்கள், அசுவினி தேவர் இருவர் ஆகியோர் வசிக்கின்றனர். இலையின் நுனியில் பிரம்மன்,  மத்தியில் மாயோன் மற்றும் லட்சுமி சரஸ்வதி, காயத்ரி, பார்வதி முதலானோர் வசிக்கின்றனர். துளசியை நினைத்தால் பாவம் போகும். துளசியைக் காப்பாற்றுபவன் பரமாத்மா ஆகின்றான். துளசியை வழிபட்டால் ஆயுள் பலம், புகழ்,  செல்வம், மக்கட்பேறு முதலியன பெருகும். துளசி காஷ்ட (கட்டை) மாலையைக் கழுத்தில் அணிந்தால் பாவங்கள் நீங்கும். துளசி தீர்த்தத்தைப்  பருகினவர் பரமபதம் செல்வர். 

பெருமாளின் மனம் கவர்ந்த துளசி மாலையை இறைவனுக்கு சாற்றுவதால் அவரின் அருட்பார்வையினை பெறலாம் என்றுதான் துளசி மாலையை வைணவ கடவுளுக்கு துளசி மாலையி சாற்றுவது…

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன