உறக்கம் தெளி பெண்ணே! திருப்பாவை பாடலும், விளக்கமும் -9

By Staff

Published:


6dae931bb99fdb1edda8ec8b8daaf335

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூமங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்;
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
‘மாமாயன், மாதவன், வைகுந்தன்’ என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்

பொருள்:

தூய்மையான மணிகளைக் கொண்ட மாடத்தில் விளக்குகள் எரிய,வாசனைப் புகை மணக்கும் படுக்கையில் கண் உறங்கும் மாமன் மகளே! மணிகள் பதிக்கப்பட்ட கதவின் தாழ்ப்பாளை திற!
மாமி!அவளை எழுப்புகிறீர்களா ? நாங்கள் இவ்வளவு நேரம் அழைத்தும் அவள் பதில் ஏதும் சொல்லவில்லையே ஏன் ?உங்கள் மகள் ஊமையா?செவிடா ?எல்லை சோம்பேறியா ?அல்லது ஏதோ மந்திரத்தால் மயக்கம் அடைந்து இன்பமாகப் பேர் உறக்கம் கொண்டாளா ? பெரிய மாயக்காரனானை ‘மாமாயன்’ என்றும்,
தாயும் தந்தையும் ஆன ‘மாதவன்’ என்றும்,
வைகுந்த வீட்டுக்குத் தலைவனான ‘வைகுந்தன்’ என்றும்
அவன் நாமங்கள் பலவற்றை நாவால் சொல்லி மனதில் நிறுத்தி கொள்வோம் வா பெண்ணே!!

திருப்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்..

Leave a Comment