உங்கள் மனது சஞ்சலத்தில் தவிக்கும்போது இந்த மந்திரத்தினை சொல்லுங்க!!

ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணாத்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினிப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே பொருள்: காமாட்சி அன்னையே!… உன்னை வணங்குபவர்களுக்கு உனது கருணையால் தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி,…

418c0a01388def7ec70ca18feadd4226-1

ச்ரியம் வித்யாம்தத்யாத்ஜனனி நமதாம் கீர்த்திமமிதாம்
ஸுபுத்ரம் ப்ராதத்தே தவ ஜடிதி காமாக்ஷி! கருணா
த்ரிலோக்யாமாதிக்யம் த்ரிபுரபரிபந்திப்ரணயினி
ப்ரணாமஸ்த்வத்பாதே ஸமிததுரிதே கிம் ந குருதே

பொருள்:

காமாட்சி அன்னையே!… உன்னை வணங்குபவர்களுக்கு உனது கருணையால் தனம், வித்தை, அளவற்ற கீர்த்தி, நல்ல புத்திரன், மூவுலகிலும் மேன்மையாக இருக்கும் தன்மை, ஆரோக்கியம், ஆயுள் ஆகியவற்றை வெகு விரைவிலேயே வரமாக கிடைக்கின்றது.

திரிபுர சம்ஹாரம் செய்த பரமேஸ்வரரின் பத்தினியே! பக்தர்களது பாவத்தைப் போக்கும் தங்களின் சரணத்தில் செய்த நமஸ்காரமானது, எங்களுக்கு எதைத்தான் கொடுக்காது?

மந்திரம் சொல்லும் முறை..

பௌர்ணமி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளிலும், அம்பாளுக்கு உகந்த திருநாட்களிலும், அம்பாளுக்கு செவ்வரளி முதலான சிவப்பு மலர்களால் அர்ச்சனை செய்து, சர்க்கரைப் பொங்கல் சமர்ப்பித்து, இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்லி வழிபட, சகல நன்மைகளும் உண்டாகும் . கெட்ட எண்ணங்கள், கடன் தொல்லைகள், குடும்பத்தில் சஞ்சலங்கள், மனதில் தேவையில்லாமல் தோன்றும் பயம் மாதிரியான சமயங்களில், வீட்டில் விளக்கேற்றி காமாட்சி அம்பாளை ஆத்மார்த்தமாக நினைத்து ஸ்லோகத்தைச் சொல்லி வந்தால், பூரண நலம் பெறலாம். 

நம்புவோம்! நல்லதே நடக்கும்!!

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன