என்னதான் விடியற்காலையில் எழுந்து படித்து, அவற்றை எழுதி பார்த்து தேர்வுக்கு தயாரானாலும், தேர்வறையில் பயம், பதட்டம் காரணமாய் படித்தது சில குழந்தைகளுக்கு மறந்து போகலாம். அவ்வாறு மறக்காமல் இருக்க கீழ்க்காணும் சரஸ்வதி தேவி மந்திரத்தினை சொல்லலாம்..
“ஸ்ரீ வித்யாரூபிணி சரஸ்வதி சகலகலாவல்லி
சாரபிம் பாதிரி சாரதாதேவி சாஸ்த்ரவல்லி
வாணி கமலவாணி வாக்தேவி வரநாயகி
வீணாபுஸ்தக தாரிணி புஸ்தக ஹஸ்தே
ஸ்ரீ வித்யாலட்சுமி நமோஸ்துதே”
இந்த மந்திரத்தை மாணவர்கள் தினமும் ஐந்து முறை உச்சரித்து வந்தால் அவர்களது மனதில் இருக்கும் பயம் நீங்கி நினைவாற்றலும், அறிவாற்றலும் அதிகரிக்கும். சரஸ்வதியின் அருளினால் மாணவர்களின் அந்த வருடத்தைய உழைப்பு வீணாகமல் நிச்சயமாய் தேர்வில் வெற்றி கிட்டுவதோடு நல்ல மதிப்பெண் பெற்று உயர்கல்விக்கு செல்லலாம்.