சிலசமயம் பாறைகளில், மரங்களில், மரத்துண்டுகளில், மணற்கட்டிகளில் லிங்கம், வினாயகர், அம்மன்… என உருவ அமைப்பு உண்டாகும். இதை சுயம்பு மூர்த்தம் என சொல்வாங்க. அதுமாதிரி, வெள்ளியங்கிரி மலை, சதுரமலைகளில் நிறைய சுயம்பு லிங்கங்களை பார்க்கலாம். ஓரடி முதல் இந்த சுயம்புலிங்கம் காணக்கிடைக்கும். ஆனால், உலகிலேயே மிகப்பெரிய சுயம்பு லிங்கத்தை பார்த்திருக்கீங்களா?!
உலகத்தின் மிகப்பெரிய சுயம்பு லிங்கம் இவர்தான். 18 அடி உயரம்.
20 அடி சுற்றளவு கொண்ட இந்த லிங்கத்திருமேனி கொண்ட பெருமானை பூதேஷ்வர் நாத் என்று அழைக்கிறார்கள். சதீஸ்கர் மாநிலம் க்ரியாபாந்த் மாநிலம், மதுரா என்னும் கிராமத்தில் இப்பெருமான் எழுந்தருளியுள்ளார்.
இன்னொரு ஆச்சர்யதகவல் என்னவென்றால் இப்பெருமானை வருடந்தோறும் கணக்கிடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் இவர் 6 முதல் 8 இன்ச் வரை வளர்ந்துகொண்டே வருகிறார்.