இந்து மத வழிபாட்டில் மிக முக்கியமான வழிபாடு இந்த நவராத்திரி வழிபாடு. இந்துமத பெண் தெய்வங்களை முன்னிலப்படுத்தி இந்த நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதர்மம் செய்து அரக்கனை பார்வதி தேவி வாதம் செய்ய 9 நாட்கள் விரதம் இருந்து பத்தாவது நாள் அரக்கனை வாதம் செய்து கெட்டதை அழித்து நல்லவைகளை உருவாக்கியதாக புராணக் கதைகள் கூறுகிறது.
ஒன்பது நாள் நவராத்திரி முடித்த பின்பு பத்தாவது நாள் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடப்படுகிறது. கல்வி ஞானத்திற்கு உகந்த தெய்வம் சரஸ்வதி. அதனால் நம் வீட்டுப் பிள்ளைகள் நல்ல முறையில் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காக சரஸ்வதி தேவிக்கு பூஜை புனஸ்காரங்கள் வழிபாடு செய்து குழந்தைகள் படிக்கும் புத்தகங்கள் மற்ற பொருட்களை வைத்து பூஜை செய்வர்.
அன்றைய தினம் ஆயுத பூஜையை ஆதலால் நமக்கு சோறு போடும் தொழிலை கடவுளாக பாவித்து உபயோகிக்கும் ஆயுதங்களை மரியாதை செலுத்தும் நிமித்தமாக பூஜை செய்வர். அதற்கு அடுத்ததாக மறுநாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. விஜயதசமி அன்று மாணவர் சேர்க்கை பள்ளியில் நடைபெறும். அன்றைய தினம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும்போது அவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்று ஐதீகம். பள்ளிகளில் பூஜை செய்து நெல்மணிகளில் அரிசிகளில் அ என்ற எழுத்தை குழந்தைகளை முதன்முதலாக எழுத செய்வார்கள். இந்த சிறப்பான நிகழ்வு வருடம் தோறும் நடைபெறும்.
இந்த ஆண்டு சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை கொண்டாடுவதற்கான சிறந்த உகந்த நேரமாக கருதப்படுவது காலை 9 முதல் 10:00 மணி 11:45 மணி முதல் 12:45 மணி வரை மாலை 4:45 மணியிலிருந்து 5. 45 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் சரஸ்வதி ஸ்லோகம் லக்ஷ்மி மந்திரம் அஷ்டலட்சுமி ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படித்து வழிபாடு செய்தால் வாழ்வில் முன்னேற்றம் வளர்ச்சி சகல சௌபாக்கியமும் உண்டாகும்.