முருகப்பெருமானுக்குரிய முக்கிய விழாக்களில் கந்த சஷ்டி விழாவும் ஒன்று. இந்த திருச்செந்தூரில்தான் அசுரனுடன் போரிட படைகளை அமைத்து அதற்கு ஆலோசனை வழங்கியவர் முருகப்பெருமான்.அசுரர்களை அழித்தொழித்த இடமிது. ஐப்பசி மாதம் சஷ்டி திருநாளில் நடந்ததை ஒட்டி இங்கு கந்த சஷ்டி விழா கொண்டாடப்படுகிறது. கந்த சஷ்டி அன்று அசுரனை அழித்ததன் அடையாளமாய் சூரசம்ஹார விழா இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்தியா மட்டுமின்றி உலகத்தமிழர்கள் பலரும் இந்த திருச்செந்தூர் வந்து முருகனுக்காக 6 நாட்கள் விரதம் இருந்து பாசுரங்கள் பாடி இறுதி நாளான சஷ்டி நாளன்று சூரசம்ஹார விழாவை கண்டுகளிக்கின்றனர்.
தினமும் கடலில் குளித்து விரதத்தை மேற்கொள்கின்றனர் இவர்கள். இன்றிலிருந்து துவங்கும் விரதம் வரும் சனிக்கிழமை கந்த சஷ்டியன்று நிறைவடையும்.
கந்த சஷ்டி விரதம் இருப்பது பல ஆச்சரியமான மாற்றங்களை நமக்கு ஏற்படுத்தும் என்பதும். முக்கியமாக குழந்தை இல்லாதோருக்கான கண்கண்ட பலன் இந்த கந்த சஷ்டி விரதம் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று கந்த சஷ்டி விழா காப்புகட்டுதலுடன் திருசெந்தூரில் துவங்குகிறது.