தஞ்சாவூர் பெரிய கோயிலில் வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 9-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
ஆஷாட நவராத்திரி என்பது வராஹிக்கு உகந்ததாகும்.
இந்த* *நவராத்திரி* *அன்னை லலிதா த்ரிபுரஸுந்தரி என்று அழைக்கப்படும் ஶ்ரீ ராஜ ராஜேஸ்வரி அன்னையின் படை தளபதியாக விளங்கிய
சப்த மாதர்களில் ஒருவரான வராகி அன்னையின் வழிபாடு உகந்த வழிபாடு தினம்
தஞ்சாவூர் பெரிய கோயிலிலுள்ள வாராஹி அம்மனுக்கு ஆண்டுதோறும் 10 நாட்கள் ஆஷாட நவராத்திரி விழா கொண்டாடப்படும். இதில் அம்மனுக்கு நாள்தோறும் அபிஷேகமும், அலங்காரமும் நடைபெறும்.
நிகழாண்டு ஆஷாட நவராத்திரி விழா ஜூலை 9-ம் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.
தொடர்ந்து வாராஹி அம்மனுக்கு இனிப்பு அலங்காரம் செய்யப்படும்.
10-ம் தேதி மஞ்சள் அலங்காரம்,
11-ம் தேதி குங்கும அலங்காரம்,
12-ம் தேதி சந்தன அலங்காரம்,
13-ம் தேதி தேங்காய் பூ அலங்காரம்,
14-ம் தேதி மாதுளை அலங்காரம்,
15-ம் தேதி நவதானிய அலங்காரம்,
16-ம் தேதி வெண்ணெய் அலங்காரம்,
17-ம் தேதி கனி அலங்காரம்,
18-ம் தேதி காய்கனி அலங்காரம் செய்யப்படும்.
நிறைவு நாளான ஜூலை 19-ம் தேதி அம்மனுக்கு புஷ்ப அலங்காரம்