சிவன் மலை ஆண்டவர் உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்ட அடுத்த பொருள்.. கனவில் வந்து கூறியது இதான்..

By John A

Published:

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தை அடுத்துள்ள சிவன்மலையில் அமைந்திருக்கும் சுப்ரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் ஆண்டவர் உத்தரவுப் பெட்டி உள்ளது. இப்பெட்டியில் முருக பக்தர்கள் யாருடைய கனவிலாவது ஆண்டவர் குறிப்பிடும் பொருள் வைத்து பூஜிப்பது, வழக்கமாக உள்ளது.

பக்தர்கள் தாங்களுக்கு வந்த கனவினை இங்குள்ள அர்ச்சகரிடம் கூறினால் சுவாமியிடம் பூ கேட்டுப் போடப்பட்டு அதில் வெள்ளைப் பூ வந்தால் அவர்கள் கண்ட கனவு உண்மை என நிச்சயமாகும். அதன்பின் பக்தர் சொன்ன பொருளானது உத்தரவுப் பெட்டியில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படும். இதுவரை இக்கோவிலில் ஏர்கலப்பை, ரூபாய் நோட்டு, தங்கம் என 100-க்கும் அதிகமான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்ளோ பெரிய வீட்டோட விலை 100 ரூபாய்க்கும் கீழயா.. ஏல தொகையை கேட்டதும் அட்ரஸை தேடும் இணையவாசிகள்..

அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் பக்தர் ஒருவர் கனவில் நிறைபடி நெல் வைத்துப் பூஜிக்கக் கோரி வந்த உத்தரவையடுத்து நிறைபடி நெல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் பக்தர் ஒருவர் கனவில் சிவப்பு சேலை வைத்து வழிபடக் கோரி வந்த உத்தரவினையடுத்து நிறைபடி நெல் மாற்றப்பட்டு சிவப்பு சேலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தப் பெட்டியில் வைக்கப்படும் பொருள் சமுதாயத்தில் ஏதேனும் தாக்கத்தையோ அல்லது முன்கூட்டியே கணிப்பதாக அமையும் என்பது நம்பிக்கை. இனி அடுத்த உத்தரவு வரும் வரை இந்தப் பெட்டியில் சிவப்பு சேலையே தினமும் பூஜிக்கப்பட்டு வரும்.