முருகக் கடவுளுக்கு அறுபடை வீடுகள் இருப்பது போல,பைரவருக்கு எட்டு படைவீடுகள் இருக்கின்றன;இந்த எட்டு படை வீடுகளிலும் மூலவராக பைரவப் பெருமானே,சிவலிங்க வடிவில் இருக்கின்றார்;ஈசனும் பைரவரும் ஒருவரே! என்பதை இதன் மூலம் பைரவப் பெருமான் நமக்கு உணர்த்துகின்றார்;
1.திருக்கண்டியூர் அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வரர் திருக்கோவில் (தஞ்சாவூரில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் 8 வது கி மீ)
2.திருக்கோவிலூர்(விழுப்புரம் அருகில்) சிவாலாயம்
3.வழுவூர் அருள்மிகு பாலகுராம்பிகை சமேத கீர்த்திவாசர் திருக்கோவில் (மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 12 வது கி மீ தொலைவில் ஒரு சாலை திரும்பும்;அங்கிருந்து 1 கி மீ தொலைவில்)
4.திருப்பரசலூர்(மயிலாடுதுறை அருகில் செம்பனார் கோவில் அருகில்)
5.திருக்கடவூர் & திருக்கடவூர் மயானம்(திருக்கடையூர் காலசம்ஹார மூர்த்தி திருக்கோவில் )
6.திருவிற்குடி வீரட்டேஸ்வரர் திருக்கோவில் (திருவாரூரில் இருந்து நாகை செல்லும் வழியில் ஒரு இடத்தில் எஸ் வடிவில் சாலை திரும்பும்,திரும்பியதும் செல்லும் கிராமத்துச் சாலை வழியாக பயணிக்க வேண்டும்)
7.குறுக்கை(மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் சாலையில் 18 கி மீ பயணிக்க வேண்டும்;அங்கே விசாரித்துச் செலலவேண்டும்)
8.திருவதிகை(பண்ருட்டி பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி .மீ.தொலைவில்)
இந்த ஆலயங்களில் வசிப்பவர்கள் 19.11.2019 செவ்வாய்க்கிழமை மதியம் 1.50 முதல் 20.11.2019 புதன் கிழமை காலை 11.41க்குள் ஏதாவது ஒரு மணி நேரம் வரை பைரவ மந்திரம் ஜபிப்பது நன்று!!!
ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்ற மந்திரத்தை
அல்லது
ஓம் ஹ்ரீம் க்ரீம் ஹீம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ(மூலமந்திரம்) என்ற மந்திரத்தை
அல்லது
ஒம் ஸ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோஹ் பைரவப் ப்ரசோதயாத்
என்ற காயத்ரி மந்திரத்தை ஒரு மணி நேரம் வரை உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் பைரவர் சன்னதி அருகில் அமர்ந்து ஜபிக்க வேண்டும்;
ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரையிலும்,அதிக பட்சம் 30 ஆண்டுகள் வரையிலும் ஜபித்து வருவதால்,கால பைரவப் பெருமானின் அருள் கிடைக்கும்;