துர்க்கைக்கு விளக்கேற்ற போறீங்களா?! அப்ப இதை படிச்சுட்டு போங்க!!

By Staff

Published:


6a2d459bc9ed69f6902adae28f2390f6-2

இக்காலக்கட்டத்தில் செவ்வாய் அல்லது வெள்ளிகளில் துர்க்கைக்கு எலுமிச்சையில் விளக்கேற்றுவது வாடிக்காயாகிவிட்டது. இப்படி எலுமிச்சையில் விளக்கேற்றச்சொல்லி எந்த ஆகமவிதிகளிலோ அல்லது புராணக்கதைகளிலோ இல்லை. ஆனால் இது பழக்கத்தின் அடிப்படையில் வருகிறது. சரி, அதையும் ஒழுங்கா கடைப்பிடிக்கிறோமாவென்றால் அதுவும் கிடையாது. துர்க்கைக்கு அனுஷ்டிக்கப்படும் ராகுகால விரதம் இருக்கும் முறையினை பார்க்கலாம்..

7ac343132e3669e9442da6130b8e3a90

ராகுகால துர்க்கை விரத பூஜையை, செவ்வாய் கிழமைகளில் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் செய்வது அவசியம். ராகுகாலம் தொடங்கியபின்னரே எலுமிச்சையை வெட்டவேண்டும். வீட்டிலிருந்தே சிலர் வெட்டி எடுத்து செல்வர். அது தவறு. கோவிலுக்கு சென்று அங்கேயேதான் பழத்தினை வெட்டவேண்டும். தோல் மெல்லியதாய் முழுக்க பழுத்த, பழுதில்லாத எலுமிச்சையே பூஜைக்கு ஏற்றது. 7, 13 அல்லாத ஒற்றை எண்ணிக்கையில் எலுமிச்சை விளக்கு ஏற்றவேண்டும். பழத்தின் குறுக்காகவே வெட்டவேண்டுமே தவிர, நெடுவாக்கில் பழத்தினை வெட்டக்கூடாது.

எலுமிச்சை தேவகனி என்பது ஐதீகம். அதனால் அதை வெட்டும்போது நமக்கு தோஷம் பீடிக்கும். அப்படி தோஷம் தாக்காமலிருக்க.. ‘ஐம்’ என்ற சரஸ்வதியின் பீஜ மந்திரத்தைச் சொல்லி வெட்ட வேண்டும். பழத்தை சாறு பிழிந்து மூடியை வெளிப்பக்கமாகத் திருப்பும்போது மகாலட்சுமிக்கு உரிய ‘க்ரீம்’ என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். எலுமிச்சை தோலுக்கு மஞ்சள் குங்குமமிட்டு, தூய்மையான புதிய பஞ்சு திரியை எலுமிச்சை மூடியில் போட்டு, நல்லெண்ணெய் அல்லது நெய்யை ஊற்றும்போது ‘க்லீம்’ என்ற சக்திதேவியின் மந்திரத்தைக் கூற வேண்டும். எலுமிச்சை விளக்கை ஏற்றும்போது ‘சாமுண்டாயை விச்சே’ எனச்சொல்லியவாறே தீபம் ஏற்ற வேண்டும். இந்தச் சொல்லுக்கு முப்பெரும் தேவியரான அம்பிகை, லட்சுமி, சரஸ்வதி ஆகியோரின் அருளை ஒருசேரத் தரும் சண்டிகா தேவியே அருள்க எனப்பொருள்.

08a9951d2c407d40f97d7d663792d382

எலுமிச்சை விளக்கேற்றுவதன் பலன்..

எலுமிச்சை நம்மை ஒத்ததாகும். மேலும் நாம் நமது உட்பகுதியான மனதினை, அதன் தூய்மையினை கடவுளுக்கு காட்டுவதே எலுமிச்சை விளக்கேற்றுவதன் அர்த்தம். மாயை, பேராசை, காமம் மற்றும் கோபம் ஆகியவற்றை கடவுளுக்கு முன்பாக வெளியே ஏறிய வேண்டும். எலுமிச்சைக்கு உள்ளே இருக்கும் வெள்ளை தோல் நமது தூய மனதையும், இருண்ட பகுதி (மறைந்திருக்கும் பச்சை விதைகள்) மாயையையும் குறிக்கும்.

விளக்குத் திரியின் முக்கியத்துவம்.

வாழைத் தண்டில் செய்யப்பட்ட திரியானது குற்றங்களையும், ஜென்ம பாவங்களையும் நீக்குகிறது.  பருத்தி திரி நல்ல அதிர்ஷ்டத்தையும், தாமரை தண்டு திரி முற்பிறவி வினைகளை நீக்கி வளமான வாழ்க்கையை நிறுவவும், வெள்ளை பூண்டு வகை செடியில் செய்யப்படும் திரி அதிர்ஷ்டம் மற்றும் சொத்துக்களைப் பெருக்கவும், புதிய மஞ்சள் பருத்தி துணி திரி, பராசக்தியின் அருளைப் பெற்று சிக்கல்களிலிருந்து விடுபடவும் மற்றும் புதிய சிவப்பு பருத்தி துணி திருமணம் மற்றும் குழந்தை பெறும் தடைகளை நீக்கி மாயம், மந்திரம், தந்திரம் போன்றவற்றிலிருந்து விடுபடவும் உதவுகின்றது.!

*எந்தெந்த நாட்களில் எலுமிச்சை விளக்கேற்றலாம்?

979f64a0e1750cd3418d86c3ce8bf2ac

நோய்களால் அதிகம் அவஸ்தைப்படுவோர், அ விரைவில் குணமாக ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்பத்தில் பிரச்சனைகள் அதிகம் இருந்தால் செவ்வாய் கிழமையன்று ராகு காலத்திலும்,  குடும்பம் மற்றும் தனிப்பட்ட வேறுசில வேண்டுதல்களுக்கு வெள்ளிக்கிழமை ராகு காலத்திலும், எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை மனமுருகி வேண்டினால், பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, செழிப்போடும் சந்தோஷமாகவும் வாழலாம் ..

Leave a Comment