விஷ்ணு பகவான் எடுத்த பல அவதாரங்களில் முக்கியமானவற்றை தசாவதாரம் என தொகுத்து வைத்துள்ளனர். தசாவதாரத்தில் மூன்றாவது அவதாரம் வராக அவதாரமாகும். இரண்யாட்சகன் பூமியை பாய்போல் சுருட்டி தன் ஆட்சிக்குட்பட்ட பாதாள லோகத்தில் வைத்துக்கொண்டான். பன்றி ரூபமெடுத்து பாதாள லோகம் சென்று இரண்யனுடன் போரிட்டு பூமியை மீட்டுக்கொண்டு வந்தார்.
வராக மூர்த்தியை தினமும் வழிபட்டு வந்தால், தீய பழக்கங்களிலிருந்து விடுபடலாம்.. துன்பங்கள் பஞ்சாய் பறக்கும்..
ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம்
கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும்
தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம்
பொருள்: சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை போல ஒளிபடைத்தவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம்.