திருவெம்பாவை பாடலும் விளக்கமும் – 2

By Staff

Published:

b1d90b5e48dfc915429e4ffabe303da9

திருவெம்பாவை பாடல் தினத்துக்கு ஒன்றாக ஒன்பது பெண்களை எழுப்புவதாய் பாடல்கள்  அமைந்திருக்கும். இந்த தொகுப்பிற்கு திருப்பள்ளியெழுச்சி எனப்பெயர்.  இப்பாடல்கள் பெண்களை எழுப்புவதாய் அமைந்தாலும், நம் உடலில் இருக்கும் நவசக்திகளை எழுப்புவதே அதன் உட்பொருள்.

பாசம் பரஞ்சோதிக் கென்பாய் இராப்பகல்நாம்
பேசும்போ தெப்போதிப் போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசுமிடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசு மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோ ரெம்பாவாய்!

பாடலின் பொருள்:

தோழியர்: இரவு பகலெல்லாம், நாம் பேசும்போதெல்லாம் எனது  “எனது பிணைப்பு (பாசம்) பரஞ்சோதியான சிவபெருமானிடம்” என்று சொல்வாய். ஆனால் இந்த மலர் நிறைந்த படுக்கையின்மேல்தான் உன் விருப்பத்தைஉண்மையில் வைத்தாயோ ? என உறக்கத்திலிருக்கும் தோழியை பார்த்து வினவுகிறார்கள்
படுத்திருப்பவள்: சீ சீ ! இப்படியா பேசுவது !?
தோழியர்: இதுவா விளையாடுவதற்கும் பழிப்பதற்கும் இடம் ?!விண்ணவர்களும் வணங்கக் கூசுகின்ற மலர் போன்ற பாதங்களைநமக்குத் தந்தருள் செய்ய வரும் ஒளியே உருவான, சிவலோகனான,தில்லைச் சிற்றம்பலத்து இறைவனுக்கு அன்பு எங்கே?! நாம் எங்கே ?!

தோழி அழைத்தும் படுக்கையில் படுத்திருக்கும் பெண்ணை பார்த்து, எப்போது பார்த்தாலும் பாசம் பரஞ்சோதின்னு சொல்லி உன் பாசம்லாம் ஈசனுக்கு அர்ப்பணித்தாயே! இப்போது அவனை காண வராமல் படுக்கையிலேயே இருக்காயே?! உன் பாசமெல்லாம் படுக்கை, தலையமீது மாறிவிட்டதான்னு தோழிப்பெண் கேட்க,

பரஞ்சோதி என இறைவன் நாமத்தை உச்சரித்த மாத்திரத்தில் படுக்கையறையும் பூஜையறையாய் மாறி புனிதமானது. பூஜையறையில் கிண்டல் பேச்சு பேசலாமோ?! கூடாதில்லையா?! அதனால், அப்பெண், கிண்டல் பேச்சு பேசும் இடம் இதுவானு கேட்கிறாள்.

அதற்கு தோழி இறைவனின் பராக்கிராமத்தைலாம் எடுத்து  சொல்லி அவன்மீதான அன்புக்கு ஈடாகுமா?! நாம் பூவுலகில் வைத்திருக்கும் அன்புன்னு கேட்பதாய் அமைந்திருக்கு இந்த பாடல்..

திருவெம்பாவை பாடலும், விளக்கமும் தொடரும்.. 

Leave a Comment