திருவக்கரை வக்கிர காளியம்மன்
சிலர் வயதானாலும் அவர்களின் மனது பக்குவ நிலையை அடையாது எதையும் புரிந்து கொள்ள முடியாமல் இருப்பர் மேலும் அவர்களின் மனது பக்குவமடையாமலும் இருக்கும் அப்படிப்பட்டவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மனை வழிபடலாம்.
வக்கிர காளியம்மன் நம் மனத்தில் உள்ள வக்கிரங்களை அகற்றி நமது மனதை சாந்தப்படுத்தி நம் மனதை சாந்தப்படுத்துகிறாள்.
இந்த கோவில் விழுப்புரம் மாவட்டம் வானூர் ஓன்றியத்தில் அமைந்துள்ளது.
பவுர்ணமி, அமாவாசை, உள்ளிட்ட நாட்களில் இங்கு கூட்டம் குவிகிறது.
செவ்வாய் , வெள்ளி மற்றும் அனைத்து விசேச நாட்களிலும் மக்கள் கூட்டம் பெண்கள் கூட்டம் அதிக அளவில் வந்து வழிபட்டு செல்லும் சிறப்பு மிக்க சக்தி வாய்ந்த இடமாக இது இருக்கிறது.
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சேக்கிழார், அருணகிரிநாதர், ராமலிங்க சுவாமிகள் ஆகியோர் இந்த கோவிலை பாடி உள்ளதாக கூறப்படுகிறது.
வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்த நேரத்தில் அந்த ராட்சசி துன்முகி கர்ப்பஸ்த்ரியாக இருந்தாளாம். குழந்தையை கொல்ல கூடாது என்பது தர்ம சாஸ்திரம் சொல்கிறது அல்லவா அதனால் துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டதாகவும் பின்னர் ஆதிசங்கரர் வந்து இவளை சாந்த சொருபீனியாக மாற்ற ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்ததாக வரலாறு.
ஒரு முறை இக்கோவில் சென்று வாருங்கள். வாழ்வில் மாற்றம் காணுவீர்கள்.