சுத்தமான திருநீற்றில் இறைவன் வாசம் செய்வதாக ஐதீகம். பசுவின் சாணத்தை வறட்டியாக்கி அதை எரித்து அந்த சாம்பலையும் மற்றும் யாக வேள்விகளில் எரித்த சாம்பலுமே சுத்தமான திருநீறாகக் கருதப்படுகிறது. இன்று நாம் அணியும் திருநீறு என்பது முற்றிலும் வேதிப் பொருட்கள் நிறைந்தவையே. இவை அலர்ஜியை ஏற்படுத்தும். தினந்தோறும் குளித்து முடித்தவுடன் இறைவனை வணங்கி திருநீறு இட்டுக் கொள்வது பல நன்மைகளை உண்டாக்குமாம்.
உடலின் அனைத்து நரம்புகளும் மூளையுடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் பெரும்பாலான நரம்புகள் நெற்றிப்பொட்டின் வழியாகச் செல்கிறது. இதனால் இப்பகுதியில் சூடு அதிகம் இருக்கிறது. எனவேதான் நெற்றிப் புருவத்திற்கு நடுவே திருநீறு பூசும் போது அது உஷ்ணத்தினை தணித்து குளிரச் செய்கிறது. மேலும் நமது தலையில் ஏற்படும் வியர்வையால் மண்டையில் நீர்கோர்த்து தலைவலி, தூக்கமின்மை ஏற்படும்.
பிறந்த தேதிப் பலன்கள்: 5 ஆம் தேதியில் பிறந்தவரா நீங்கள்? உங்களுக்கான பலன்கள் இதோ!
இந்தக் கெட்ட நீரை வெளியேற்றுவதில் திருநீறு தலையாய பங்கு வகிக்கிறது. மேலும் மஞ்சள் மற்றும் குங்குமம் வைப்பதும் உடல் நலனுக்கே. எவ்வாறெனில் மஞ்சள், குங்குமம், விபூதி, சந்தினம் ஆகிய அனைத்துமே சிறந்த கிருமி நாசினிகள். நெற்றிப்பகுதி சூடாக இருப்பதால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தான் மஞ்சள் மற்றும் குங்குமத்தினை நெற்றியில் வைப்பதால் ஆன்டிபயாடிக்காகச் செயல்படுகிறது.
மேலும் உடலில் சுத்தமான விபூதி பூசும் போது கெட்ட நீரை வெளியேறச் செய்கிறது. இதனால் உடல் துர்நாற்றத்திலிருந்து தவிர்க்கலாம். இதனால் திருநீற்றுப் பதிகம் என்றே நோய் தீர்க்கும் திருநீற்றின் அருமையைப் பற்றி திருஞானசம்பந்தர் பாடியிருக்கிறார். வெக்கை நோயைப் போக்குவதில் திருநீறு அருமருந்தாகச் செயல்படுகிறது. இதுமட்டுமன்றி முகப் பொலிவினைக் கூட்டவும், ஞானம், புத்திக் கூர்மை அதிகரிக்கவும் விபூதி உதவுகிறது.