ஆண்டாள் கண்ணனையே தன் கணவனாக மனதில் கொண்டு வாழ்ந்தவள், திருமண வரன் தள்ளிப் போதல், திருமணம் சார்ந்த தோஷம் என திருமண ரீதியாக தடையினை சந்திப்பவர்கள் பூரம் நட்சத்திர தினத்தன்று ஆண்டாளை நினைத்து விரதம் இருந்து வழிபட வேண்டும்.
பூரம் தினத்தன்று ஆண்டாளை எப்படி வழிபடுவது எப்படி என்று பார்க்கலாம். அதாவது முடிந்தவர்கள் ஆண்டாளுக்கு உரிய திருத்தலமான ஸ்ரீவில்லிப்புத்தூர் தலத்தில் உள்ள ஆண்டாள் கோயிலுக்குச் சென்று அம்மனை வழிபட்டு வருதல் வேண்டும்.
மேலும் இந்த வழிபட்டினை செவ்வாய்க்கிழமைகளில் செய்தல் வேண்டும், மேலும் வீட்டில் உள்ள துளசி மாடத்தை கழுவிவிட்டு மஞ்சள் கலந்த தண்ணீரைத் தெளித்தல் வேண்டும், மேலும் துளசிக்கு சுத்தமான நீரை ஊற்றி, மாடத்தை மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்.
மேலும் துளசி மாடத்தில் பூஜையை முடித்துவிட்டு அரக்கு கலர் புடவை, கற்கண்டு சாதம், தாமரை மலர், சர்க்கரைப் பொங்கல், சுண்டல் வைத்து ஆண்டாளுக்குப் படைத்தல் வேண்டும்.
மேலும் துளசி மாடத்தை 108 தடவை சுற்றி வர வேண்டும், மேலும் ஆண்டாளுக்கான பாராயணத்தைப் பாடி விரதத்தை முடித்தல் வேண்டும்.