சிவகங்கையில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவிலும், திருப்பத்தூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது.
வேத பாராயணம், திவ்யப்பிரபந்தம் இவைகளைப் பாராயணம் செய்யும் குழுவிற்கும், பாகவத குழுவிற்கும் கோஷ்டி என்று பெயர்.
இந்த கோஷ்டியின் சிறப்பைக் குறிப்பதற்காக திரு என்ற அடைமொழியை முன் போட்டு திருக்கோஷ்டி என்று வந்து அந்த ஊருக்கு திருக்கோஷ்டியூர் என்று பெயர் வந்தது.
தல வரலாறு
புரூரவஸ் என்ற மன்னன் மதங்க முனிவரின் நியமனப்படி, சில்ப சாஸ்திர வல்லுநரைக் கொண்டு அந்த சாஸ்திரம் உரைத்தான். அப்போது தேர்வடிவாக அக்ரகாரத்தை இந்நகரில் அமைத்தான்.
கங்கைக் கரையில் வாழ்ந்த வேதங்களிலே வல்லுநரை அழைத்து வந்து இத்திருப்பதியிலேயே நித்யவாஸம் செய்ய ஏற்பாடு செய்தான். அவர்கள் கருடன் வேதங்களின் ஒலிகளை முழங்கச் செய்தனர். வேதாந்தங்களையும் பயில வழி வகுத்தான்.
அவர்களும் வாதம் செய்தவர்களை வென்று வேத மார்க்கத்தை நிலை நாட்டினர். இவர்கள் அப்போது அந்தத் தலத்தில் சௌம்ய நாராயணனை சேவித்து வாழ்ந்து வந்தனர்.
தீர்த்தம்
இத்தலத்தில் ஓடும் மணி முத்தாற்றிலும், அமர புஷ்கரணியிலும் தீர்த்தம் ஆடுபவர்கள் முக்தி பெறுவர் என்பது ஐதீகம்.
அமைப்பு
கங்கை, யமுனை போன்ற நதிகள் புனிதமானவை. அவை போன்றே காசி, கச்சி, திருக்கோஷ்டியூர் போன்ற தலங்களும் போற்றப்படுகின்றன. மதங்க முனிவரின் வேண்டுகோளுக்கு இணங்க பிரமன் மயனைக் கொண்டு மிகச் சீரிய முறையில் கோவிலையும், மாடமாளிகைகளையும் அவற்றைச் சுற்றிலும் நகரத்தையும் அமைத்தான். 3 தளங்கள் மற்றும் அஷ்டாங்க விமானம், அமர புஷ்கரணி ஆகியவற்றையும் அமைத்தான்.
தலப்பெருமை
இந்த தலத்தில் சித்தி பெறுவது உறுதி என்பதை உணர்ந்தார் மதங்க முனிவர். புண்ணிய புஷ்கரணியின் கரையிலே ஆசிரமம் அமைத்து அதில் நீராடி அஷ்டாங்க விமானத்தையும், பரந்தாமனையும், சௌம்ய நாராயணனையும் ஆராதனை செய்தார்.
இத்தல பெருமையை வாயு மூலம் அறிந்தார் தேவேந்திரன். அவரும் திருக்கோட்டியூர் வந்து இங்குள்ள பெருமாளை சேவித்து சித்திரை மாதத்தில் உற்சவம் நடத்தி பேறு பெற்றார்.
இங்கு நடக்கும் தெப்பத்திருவிழா பிரசித்தி பெற்றது. அப்போது 3 நாள்கள் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெறும். பக்தர்கள் தங்களுடைய காரியங்கள் நிறைவறவும், நிறைவேறியதும் நினைத்தபடியே நேர்த்திக்கடன் செலுத்துவர். இங்குள்ள தெப்பக்கரையில் விளக்குகளை ஏற்றி வைத்து வழிபடுவார்கள்.