முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தினமும் எதாவது விசேஷம் நிகழ்ந்துக்கொண்டேதான் இருக்கும். அந்த வகையில் மாசி திருவிழாவுக்கான கொடியேற்றம் நேற்று வெள்ளிக்கிழமை (28/2/2020) லாகலமாய் நடந்தேறியது. நேற்று முன்தினம் வியாழக்கிழமை (27/2/2020) மாலை கொடிப்பட்டத்தை சின்ன சுப்பிரமணியன் அய்யர் கையில் ஏந்தியவாறு, கோவில் யானையான தெய்வானைமீது அமர்ந்து, எட்டு வீதிகளிலும் வலம் வந்து, சன்னதி தெரு வழியாக கோவிலை சென்றடைந்தார்.
அதை தொடர்ந்து நேற்றைய தினம் காலையில் கொடியேற்றம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளையில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான் வீதியுலா நடைப்பெறும்.
அதன் விவரம்…
29.02.2020 இரவு சுவாமி சிங்ககேடய சப்பரத்திலும், அம்மன் சின்ன பல்லக்கிலும் வலம் வருகிறார்கள்.
01.03.2020 மாலை சுவாமி தங்கமுத்துக்கிடா வாகனத்திலும்,அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும் உலா வருகின்றனர்.
02.03.2020 மாலை சுவாமி வெள்ளியானை வாகனத்திலும், அம்மன் வெள்ளிசரப வாகனத்திலும் உலா வருகின்றனர்.
03.03.2020 மாலை குடவரை வாயில் தீபாராதனை சுவாமியும், அம்மனும் தங்கமயில் வாகனத்திலும் உலா வருகின்றனர்.
04.03.2020- இரவு சுவாமி வெள்ளித்தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் உலா வருகின்றனர்.
05.03.2020 காலை அருள்மிகு சண்முகப்பெருமான் உருகு சட்ட சேவை மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி சிவப்பு நிற மலர்களில் சுமாமியும் அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருப்பார்கள்.
05.03.2020 காலை அருள்மிகு சண்முகப்பெருமான் உருகு சட்ட சேவை மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி சிவப்பு நிற மலர்களில் சுமாமியும் அம்மனும் அலங்கரிக்கப்பட்டிருப்பார்கள்.
06.03.2020 அதிகாலை 5 மணிக்கு அருள்மிகு சண்முகப்பெருமான் வெள்ளை சாத்தி, சுவாமியும் அம்மனும் வெள்ளை நிற மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வலம் வருவார்கள். பகல் 11.30 மணிக்கு துளசி மாலை சாத்தி சண்முகப்பெருமான் உலா வருவார். இதற்கு பச்சை சார்த்துதல் எனப்பெயர்.
. 10ஆம் திருநாளான வருகிற 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது. பக்தர்கள் அனைவரும் மாசி மக திருவிழாவில் கலந்துக்கொண்டு முருகன் அருள் பெறுக!!