காசி யாத்திரை செல்கிறீர்களா? அப்போ இதை மறக்காம படியுங்கள்!!

காசி யாத்திரை என்பது பலரது கனவு என்று சொல்லலாம். வயது முதிர்ந்த பலரும் வாழ்வில் ஒரு முறையாவது காசிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பதுண்டு. காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது முக்கியமாக…

kaasi

காசி யாத்திரை என்பது பலரது கனவு என்று சொல்லலாம். வயது முதிர்ந்த பலரும் வாழ்வில் ஒரு முறையாவது காசிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பதுண்டு. காசி யாத்திரை பற்றி சொல்ல ஆரம்பிக்கும் பொழுது முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு.

காசி யாத்திரை என்பது நேரடியாக காசிக்கு செல்லும் வழக்கம் கொண்டது இல்லை. ராமேஸ்வரத்திலிருந்து தொடங்கி காசிக்கு சென்று மீண்டும் ராமேஸ்வரம் வந்து இந்த யாத்திரையை பூர்த்தி செய்வார்கள்.

kasi

காசி செல்லும் முன் ராமேஸ்வரம் தொடங்கி பிரயாகை மற்றும் கயா இவை அனைத்தும் சேர்ந்துதான் காசி யாத்திரை. இதற்கு காசி யாத்ரா க்ரமம் எனும் விதியும் உண்டு. ராமேஸ்வர யாத்திரையை பற்றி நன்கு முழுமையாக அறிந்து ராமேஸ்வரம் சென்று பின்னர் காசி செல்வது நன்மை தரும்.

அதேபோல் யாத்திரையை முடிக்கும் பொழுது நாம் உறவினர்களையும் பெரியோர்களையும் நமது இல்லத்தில் வரவழைத்து அன்னமிட்டு யாத்திரையை பூர்த்தி செய்து கொள்வது மிகவும் விஷேசம்.

kaasi

பொதுவாக எந்த தீர்த்த யாத்திரை சென்றாலும் முன்னோர்களுக்காக எள்ளு தர்ப்பணம் செய்வது மிக முக்கியம். அதோடு தேவர்களுக்கும் ரிஷிகளுக்கும் தர்ப்பணம் கொடுப்பதும் புண்ணியமாகும். தேவதர்ப்பணம் மற்றும் ரிஷி தர்ப்பணத்தை பெற்றோர் உயிருடன் இருப்பவர்களும் செய்யலாம். யாத்திரை செல்லும் இடத்தில் பெரிய தானங்களையோ பூஜைகளையோ செய்ய எண்ணி அரைகுறையாக செய்வதை விட சிறிய அளவு செய்தாலும் முறையாக நியமத்துடன் பெரியோர்கள் கூறியபடி செய்தால் நிச்சயம் புண்ணியம் உண்டு.

பக்தியோடும் நம்பிக்கையோடும் செய்யும்பொழுது தான் தீர்த்த யாத்திரைகள் பலன் தரும். மாறாக கடமைக்காக செய்யும் தீர்த்த யாத்திரையால் எந்த பலனும் இல்லை.