தீமைகளை அழித்து தர்மம் வெற்றிபெறுவதை குறிப்பது தான் நவராத்திரி விழாவாக நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான மக்கள் கொண்டாடுகின்றனர். பண்டைய காலத்தில் அதிகளவில் கடைபிடிக்கப்பட்ட சக்தி வழிபாடு எனப்படும் பெண் தெய்வங்களின் வழிபாட்டை இந்த ஒன்பது நாட்களும் மேற்கொள்ளும் விழாவாக நவராத்திரி விழா இருக்கிறது.
இந்த காலத்தில் நவராத்திரி வழிபாட்டை எப்படி செய்தால் எத்தகைய பலன்கள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கு காணலாம். நவராத்திரி தினங்களில் ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் பூஜை அறையில் உள்ள சரஸ்வதி, லட்சுமி, அம்பாள் படங்களுக்கு விளக்கேற்றி தூபங்கள் ஏந்தி பழம் அல்லது கற்கண்டுகள் போன்றவற்றை வைத்து தேவியருக்குரிய மந்திரங்களை துதித்து வழிபட வேண்டும்.
நவராத்திரி பொம்மை கொலு வைத்து ஒன்பது நாட்களும் விரதம் இருந்து வழிபடுபவர்களின் வீட்டில் அனைத்து ஐஸ்வரியங்களும் சேரும் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் நம்பிக்கை ஆகும். கொலு வைத்து இருப்பவர்களின் வீடுகளில் 9 ராத்திரி காலத்திலும் 9 விதமான மலர்களை கொண்டு தேவியரை பூஜிக்க வேண்டும்.