தடைப்பட்டுவரும் திருமணம் கைக்கூடி வர 10 பரிகாரங்கள்…

அழகு, அறிவு, படிப்பு, பொறுமை, அந்தஸ்து, நல்ல குணம் என அனைத்து நல்லவிசயங்கள் இருந்தாலும் சிலருக்கு திருமணம் கைக்கூடி வருவது தடைப்பட்டுக்கொண்டே செல்லும். அப்படி திருமணமாகாமல் தவிப்போர் கீழ்க்காணும் 10 பரிகாரங்களை அவரவர் வசதிப்படி…

அழகு, அறிவு, படிப்பு, பொறுமை, அந்தஸ்து, நல்ல குணம் என அனைத்து நல்லவிசயங்கள் இருந்தாலும் சிலருக்கு திருமணம் கைக்கூடி வருவது தடைப்பட்டுக்கொண்டே செல்லும். அப்படி திருமணமாகாமல் தவிப்போர் கீழ்க்காணும் 10 பரிகாரங்களை அவரவர் வசதிப்படி செய்தால் விரைவில் திருமணம் நடக்கும்.

1b0302adbe117be44a60ff6ba7797322

  1. துளசி கல்யாணம் செய்தால் விரைவில் திருமணமாகும்.
  2. ஓர் ஏழைப் பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.
  3. சென்னை – திருவேற்காட்டில் தேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது.
    பல்வேறு புராணச் சிறப்புகள் மிக்கது. இந்த ஆலயம் திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.
  4. வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை கடலை எண்ணை நீங்கலாக பிற பஞ்ச தீப எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.
  5. காஞ்சீபுரம் கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமைமற்றும்பஞ்சமி நாட்களில் அடிப்பிரதட்சணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.
  6. தேவதோஷம், பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம், திருஷ்டி தோஷம், பிரேத சாபம், அபிஷார தோஷம் என்று ஆறு வகையான தோஷங்களால் திருமணம் தடைப்படுகிறது. கல்யாண சுந்தரேஸ்வரரை வணங்கி விரதம் இருந்தால் இந்த 6 வகை தோஷங்களும் நீங்கி உடனே திருமணம் ஆகிவிடும்.
  7. திருமணம் செவ்வாய் தோஷத்தால் தடைபடு மாயின் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள முத்துக்குமார சுவாமியை (முருகன்) வணங்கி வர விரைவில் திருமணம் நிச்சயமாகும்.
  8. வியாழக்கிழமையில் தட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சித்து வழிபட திருமணம் கை கூடும்.
  9. புன்னை மரத்தை சுற்றி வணங்கி வந்தால் திருமணம் விரைவில் நடைபெறும்.
  10. ஞாயிறு தோறும் ராகு காலத்தில் (மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை) தீபம் ஏற்றி துர்க்கையை வழிபட வேண்டும். துர்க்கையை மனம் உருக வேண்டினால் நிச்சயம் பெண்களுக்கு விரைவில் திருமணம் கூடி வரும். நம்பிக்கையோடு பரிகாரங்கள் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன