மயில் இறகில் ஒளித்து வைத்த கிருஷ்ணபரமாத்மா… நாளை வருகிறது அந்த அற்புத நேரம்!

நாம் கடவுளிடம் பலவாறு நம் கோரிக்கைகளை முன்வைத்து வேண்டுவோம். ஆனால் என்ன வேண்டி என்ன பலன்? ஒன்றுமே நடக்க மாட்டேங்குதுன்னு அங்கலாய்ப்பதும் உண்டு. ஆனால் எதை எப்போ எப்படி வேண்டணும்னு ஒண்ணு இருக்கு. அதை…

srikrishna

நாம் கடவுளிடம் பலவாறு நம் கோரிக்கைகளை முன்வைத்து வேண்டுவோம். ஆனால் என்ன வேண்டி என்ன பலன்? ஒன்றுமே நடக்க மாட்டேங்குதுன்னு அங்கலாய்ப்பதும் உண்டு. ஆனால் எதை எப்போ எப்படி வேண்டணும்னு ஒண்ணு இருக்கு. அதை அப்போ அப்படி வேண்டுனாதானே கிடைக்கும். வாங்க அப்படி என்ன தான் சேதின்னு பார்ப்போம்.

அபிஜித் நட்சத்திர நேரம் என்பது மாதம் ஒன்று அல்லது இருமுறை வரும். அந்த வகையில் நாளை (29.1.2025) தை அமாவாசை அன்று வருகிறது. இந்த நேரத்துக்கு அப்படி என்னதான் சிறப்பு என்றால் அப்போது கடவுளிடம் என்ன பிரார்த்தனை வைக்கிறோமோ அது விரைவில் நடக்கும் என்பது ஐதீகம்.

28வது நட்சத்திரம் தான் சக்தி வாய்ந்த அபிஜித். இதை மனிதர்களிடம் கொடுத்தால் அவர்கள் தவறாகப் பயன்படுத்தி விடுவார்களாம். அதனால் கிருஷ்ணர் மயில் இறகில் ஒளித்து வைத்தாராம். உத்திராடம், திருவோணம் நட்சத்திரத்துக்கு இடைபட்ட 20 நிமிடம் தான் அபிஜித் நட்சத்திர நேரம்.

அபிஜித் முகூர்த்தம் என்பது வேறு. இது தினமும் மதியம் 11.45 மணி முதல் 12.15 மணி வரை வரும். இந்த நேரத்தில் நம் வேண்டுதலை பிரபஞ்சத்திடம் சொல்லலாம். நல்ல பலன் கிடைக்குமாம்.

நாளை காலை 8.08 மணி முதல் 8.32 மணி வரை அபிஜித் நட்சத்திர நேரம் வருகிறது. நமது வேண்டுகோள் ஒரே பிரார்த்தனையாக இருக்க வேண்டும். மாறி மாறி நினைத்தால் பலன் கிடைக்காது. அனுமன் மந்திரம், கடன் சுமை குறைய மகாலட்சுமி மந்திரம், பணவரவுக்கு குபேர மந்திரம் என சொல்லலாம். எல்லாவற்றுக்கும் மேலாக நம்பிக்கைதான் முக்கியம்.