கடந்த 2019ல் சீனாவின் வூகான் மாகாணத்தில் ஏற்பட்ட கொரோனா தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் அனைத்திலும் பரவி விட்டது. இதனால் கடந்த வருடம் லாக் டவுன் செய்யப்பட்டது. வரலாற்றிலேயே இல்லாத அளவு திருப்பதி கோவில் நடை அடைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வருடம் முக்கிய திருவிழாக்களான சமயபுரம் மாரியம்மன் கோவில் பச்சை பட்டினி விரதம், முக்கிய திருவிழாவான அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் முதலியவை நிறுத்தப்பட்டன.
இது போல தமிழகம் முழுவதும் எண்ணற்ற ஏகப்பட்ட திருவிழாக்கள் நிறுத்தப்பட்டன. அழகர் ஆற்றில் இறங்குவதை எல்லாம் நிறுத்துவது இதுவரை நடக்காத ஒரு நிகழ்வு, மதுரையின் மிகப்பெரும் திருவிழா அனைவருக்கும் தெரிந்த திருவிழா கடந்த வருடம் நிகழ்ந்தது போல அனைத்து திருவிழாக்களும் இந்த வருடமும் கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் பக்தர்கள் சொல்லொணா துயரம் அடைந்துள்ளனர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. பக்தர்களின் வேதனையையும் சோதனையும் அந்த இறைவன் நினைத்தால்தான் போக்க முடியும் அந்த இறைவன் எப்போது கண் திறந்து பார்ப்பாரோ இந்த கொரோனா தொல்லையில் இருந்து விடுதலை இல்லையா என மக்கள் ஏங்கி வருகின்றனர் என்பது உண்மை.
இது போல பாரம்பரிய திருவிழாக்களை தொடர்ந்து இழந்து வருகிறோம் என்பதும் உண்மை.