கணப்பொருத்தம் கைகூட விநாயகர் சதுர்த்தி சிறப்பு வழிபாடு!!

By Staff

Published:

எந்த ஒரு காரியத்தையும் தொடங்கும் முன் மூல முதற்கடவுள் என்று போற்றப்படும், விநாயகரை வழிபடுவதுதான் மரபு.

விநாயகர் சிலையினை மஞ்சளிலே பிடித்தாலும், சாணத்தில் பிடித்தாலும், எழுந்தருளி அருள்பாலிக்கும் தன்மை கொண்டவர் விநாயகர்.

விநாயகப் பெருமானை வழிபடும் முறைகளில் அவர் சன்னதியில் குட்டுப் போடுவதும், காதுகளை இழுத்து தோப்புக் கரணம் போடுவதும் ஆகும்.

93b42a21846e1461b33d9ee43c9ee351

கணங்களுக்கெல்லாம் அதிபதியாக இருப்பதால், அவரை ‘கணபதி’ என்றழைக்கின்றோம். இருபத்தேழு நட்சத்திரங்களையும், மனித கணம், தேவ கணம், ராட்சச கணம் என்று பிரித்து வைத்திருக்கின்றார்கள். எந்தக் கணத்தை எந்தக் கணத்தோடு சேர்த்தால் ஒற்றுமையோடு இருக்கும் என்பதை வலியுறுத்தவே, கல்யாண நேரத்தில் ‘கணப்பொருத்தம்’ பார்க்கின்றனர். கணப்பொருத்தம் தான் குணப்பொருத்தமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

இந்தக் கணப்பொருத்தம் சரியாகப் பொருந்தாமல், வாழ்க்கையில் பிரச்சினைகளை சந்திப்பவர்கள் அதிகம்.
அவர்கள் விநாயகருக்கு உகந்த நாட்களில் அவருடைய ஆலயங்களுக்கு சென்று வாரம் ஒருமுறை சிறப்பு வழிபாடு செய்தல் வேண்டும்.
மற்ற நாட்களைக் காட்டிலும் விநாயகர் சதுர்த்தி அன்று கணப்பொருத்தம் கூட பரிகாரங்களை செய்தால் கணப் பொருத்தம் கூடி, கணவன்- மனைவி உறவில் பிரச்சினைகள் குறையும்.

Leave a Comment