சிவப்பெருமான் அலங்காரத்தின்மீது அத்தனை ஈடுபாடு இல்லாதவர். சுடுகாட்டு சாம்பலை பூசி, புலித்தோலை ஆடையாய் அணிந்து, பாம்பினையும், ருத்ராட்சத்தையும் ஆபரணங்களாய் அணிந்தவர். ஆனா, காதணிகளை மட்டும் 7 அணிந்திருப்பதாய் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசரின் பாடல்கள் சொல்லுது.
அந்த ஏழு காதணிகள் எவைன்னு பார்க்கலாமா? குழை, குண்டலம், தோடு, சுருள், கோளரவம், பொற்றோடு, ஓலைன்ற காதில் போட்டுக்கும் ஆபரணத்தை அணிந்தார். அதனால்தான் அவருக்கு தோடுடைய சிவன் எனப்பேர் வந்தது.