கண் திருஷ்டியால் வீட்டில் பிரச்னையா? அதை நீக்க எளிய வழிகள் இதோ…

By Meena

Published:

கல்லடிபட்டாலும் கண்ணாடி படக்கூடாது என்பார்கள். அப்படி கண் திருஷ்டிக்கு கெட்டவைகளை ஏற்படுத்தும் தன்மை இருக்கிறது. ஒருவர் வீட்டில் தேவையில்லாமல் ஏதாவது ஒரு சண்டை சச்சரவு உடல் சரியில்லாமல் போவது போன்றவை நடந்து கொண்டிருக்கும். அப்போது இதற்கு கண் திருஷ்டி தான் காரணம் என்று கூறுவார்கள்.

கண் திருஷ்டி என்பது ஒருவர் நம்மை சுற்றி இருப்பவர்கள் நம் மீது பொறாமையாலோ ஏக்கத்தாலோ படும் பார்வை எதிர்மறை சக்தியாக நம்மை வந்து தாக்குவதே கண் திருஷ்டி என்கிறார்கள். இதை போக்குவதற்கு சில எளிமையான வழிகள் இருக்கின்றது. அது என்ன என்பதை இனி காண்போம்.

முதலில் கண் திருஷ்டி நம்மை தாக்காமல் இருப்பதற்கு வீட்டு வாசலில் நிலை படிக்கு அருகில் ஒரு எலுமிச்சம் பழத்தை சரிபாதியாக இரண்டாக வெட்டி ஒரு பாதியில் மஞ்சளையும் ஒரு பாதியில் குங்குமத்தையும் தடவி வைக்க வேண்டும். ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் இதை மாற்றி வைக்க வேண்டும். கண்திருஷ்டி விலகுதற்கு வாரத்தில் ஒருமுறையாவது குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் கற்பூரம் சுற்றி எரியவிடலாம். வீட்டு வாசலுக்கு நேராக மேலே பச்சை மிளகாய் கறித்துண்டு போன்றவை கட்டி தொங்க விடுவது கண் திருஷ்டியை விக்கும்.

கண் திருஷ்டி போக்க நினைப்பவர்கள் செவ்வாய் வெள்ளி ஞாயிற்றுக்கிழமை அமாவாசை தினங்களில் கழிக்க வேண்டும். மற்றொரு சக்தி வாய்ந்த பரிகாரம் கண் திருஷ்டி போக்குவதற்கு கல் உப்பு அற்புதமான ஒன்றாகும். நமது இடது கையில் சிறிது கல் உப்பு சிறிது கடுகு ஐந்து வர மிளகாய் எடுத்துக்கொண்டு அனைவரையும் கிழக்கு முகமாக நிற்க சொல்லி தலை முதல் கால் வரை முழுவதுமாக சுற்றி அந்த கையில் வைத்திருக்கும் பொருளை முச்சந்தியில் கொண்டு போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விட வேண்டும். இப்படி செய்வதன் மூலம் கண் திருஷ்டி நம்மை விட்டு விலகி நன்மைகள் நடக்க ஆரம்பிக்கும்.