பெரும்பாலும் சிவன் கோவில்கள் அனைத்திலும் ஆகம விதிக்கு உட்பட்டு நவக்கிரகம் இருக்கும். இராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் கோவிலில் மட்டும் நவக்கிரகம் இல்லை. இதற்கு காரணம் உண்டு. மண் தோன்றுவதற்கு முன்பே மங்கை தோன்றியது வரலாறு அதாவது இந்த மண் தோன்றுவதற்கு முன்பே உத்திரகோசமங்கை தோன்றியது என ஒரு உவமைக்காக சொல்வர்.
மிகப்பழமையான இந்த கோவில் சிவன் பார்வதி இருவரும் பிறந்த ஊர் என அழைக்கப்படுகிறது. சிவனே இந்த ஊரில் பிறந்தார் எவ்வளவு பெரிய விசயம். சிவபெருமான் தான் நவக்கிரகங்களை படைத்தார். நவக்கிரகங்கள் தோன்றுவதற்கு முன் சனீஸ்வரன், சூரியன், சந்திர வழிபாடு மட்டுமே இருந்தது.
அதனால் இக்கோவில் நவக்கிரகங்கள் படைக்கப்படுவதற்கு முன்பே உள்ள கோவில் என்பதால் இக்கோவிலில் நவக்கிரகங்கள் இல்லை சூரியன், சந்திரன், சனீஸ்வரன் வழிபாடு மட்டுமே உள்ளது.