சப்த கன்னியர் கதை தெரியுமா?!

By Staff

Published:

a5007516bf0227733cfe56211b1c2d76

பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டீஸ்வரி என்று அழைக்கப்படும் ஏழு தேவியரே சப்த கன்னியர் என அழைக்கப்படுவர். சப்த என்றால் ஏழு என்று பொருள். உலகை இயக்கும் ஐந்தொழில்கள் புரிந்து வரும் சிவசக்தி எடுத்த திருமேனிகளே, “சப்த கன்னியர்”என்றும் சொல்வர். இவர்களுக்கு, சப்த மாதர்கள், சப்த மாத்திரிகைக்கள், பத்மமாதாக்கள் எனவும் சப்த கன்னியர்களை அழைப்பார்கள்.

சிவபெருமான் அந்தகாசுரன் எனும் அரக்கனுடன் போர் புரிந்தார். அப்பொழுது அந்காசுரனின் உடலில் இருந்து வெளிபடுகின்ற இரத்தத்திலிருந்து அசுரர்கள் தோன்றினார்கள். அவர்களை அழிக்கும் பொருட்டு சிவபெருமான் தன் வாய் அக்கினியிலிருந்து யோகேசுவரி என்ற சக்தியை தோற்றுவித்தார். யோகேசுவரி மகேசுவரி என்ற சக்தியை உருவாக்கினார். மகேசுவரிக்கு துணையாக பிரம்மா பிராம்மியை தோன்றுவித்தார். திருமால் நாராயிணியை தோற்றுவித்தார். இந்திரன் இந்திராயையும், முருகன் கௌமாரியையும், வராக மூர்த்தி வராகியையும், யமன் சாமுண்டியையும் தோன்றுவித்தனர்.

4e33b2a592f8a8b81563d7c0b6113fb5-2

சும்ப – நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப்போர் புரிந்த போது அவளுக்கு உதவியாக இத்தேவியர்கள் உற்பவித்தனர் என்று மார்க்கண்டேய புராணம்  கூறுகின்றது. சிவபெருமானின் பணிப்பெண்டிரே சப்த கன்னியர் என காளிதாசனின் குமார சம்பவம் சொல்கிறது. மற்றொரு புராணக்கதையில் மகிசாசுரன் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே தனக்கு அழிவு உண்டாக வேண்டுமென வரம் பெற்றிருந்தார். அதனால் தேவர்களும், முனிவர்களும் மகிசாசுரனால் துன்பமைடைந்தனர். அனைவரும் சென்று சிவபெருமானிடம் தங்களை காத்தருள வேண்டினர். உமையம்மையிடம் அனைவரையும் காத்தருள வேண்டினார் சிவபெருமான். அதனால் உமையம்மை தன்னிலிருந்து சப்த கன்னியர்களை தோற்றுவித்து மகிசாசுரனை அழித்தார் என சொல்கிறது.

2e7d0fbd0aa35359fa594b0abb4dffec

இவர்கள் ஆண் தெய்வங்களின் துணைவியர் அல்ல. பராசக்தியின் அம்ச அவதாரங்களான இவர்கள் தனி பெண் தெய்வங்கள் என்றும், லலிதா பரமேஸ்வரியின் உடலில் இருந்து வெளிப்பட்டவர்கள் என்றும் தேவி மகாத்மியம் கூறுகிறது. சப்த கன்னியர் சன்னிதியில் விநாயகர், வீரபத்திரர், பைரவர் ஆகிய மூவரில் ஒருவரின் சிலையும் சேர்த்தே பிரதிஷ்டை செய்வது மரபு. இவர்களில் வாராஹியை தனி தெய்வமாக வழிபடும் வழக்கம் பிற்காலத்தில் உண்டானது.
காதோலை, கருவளையம், பொரி, கடலை, பொங்கல் வைத்து இவளை வழிபடுவது வழக்கம். உயிர்பலியை பெரிதும் விரும்புபவள். பெரும்பாலும் ஊருக்கு வெளியே வயல்வெளிகளில்தான் இவர்களது சன்னிதி இருக்கும். பெரும்பான்மையான இடத்தில் சிலாரூபம் எதுமின்றி லிங்கம் மாதிரியான கற்களை நட்டு, அவற்றையே சப்த கன்னியராய் வழிபடும் வழக்கம் உண்டு. சப்த கன்னியர் கோவில்களில் மேற்கூரை அமைக்கும் வழக்கமில்லை. காலப்போக்கில் இம்முறை மாறிவிட்டது.

Leave a Comment