சனிபகவான் தொல்லையிலிருந்து தப்பிக்கனுமா?! இந்த அனுமன் மந்திரத்தை சொல்லுங்க!!

நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக இருப்பது “சனி பகவான்” . அத்தனை  சக்தி வாய்ந்தவர்தான் இந்த சனிபகவான், சனியினை போல கொடுப்பாரும் இல்லை. சனியினைப்போல கெடுப்பாரும் இல்லை என சொல்வார்கள். ஆனால், சனிபகவான்…


08b16eda343939d220e4af355d0be2b6

நவகிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக இருப்பது “சனி பகவான்” . அத்தனை  சக்தி வாய்ந்தவர்தான் இந்த சனிபகவான், சனியினை போல கொடுப்பாரும் இல்லை. சனியினைப்போல கெடுப்பாரும் இல்லை என சொல்வார்கள். ஆனால், சனிபகவான் கொடுப்பது கணக்கில் வராது.கெடுப்பதுதான் கணக்கில் வரும். அதனால் சனிபகவான் ஆதிக்க காலத்தை நினைத்து மக்கள் கலங்குவார்கள். சனிபகவான் தொல்லையிலிருந்து தப்பிக்க கீழ்க்கண்ட மந்திரத்தை சொல்லி அனுமனை வணங்கினால்  கைமேல் பலன் கிடைக்கும்.

32e39ab926b4d874620a94c0b3d96285

அனுமன் மூல மந்திரம்:

ஹங் ஹனுமதே ’

ருத்திராத்மஹெ ஹுங் பட்”

இம்மந்திரத்தை அனுமனுக்கு உகந்த செவ்வாய், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், அனுமன் கோவிலுக்குச் சென்றோ அல்லது வீட்டிலேயோ குளித்து முடித்து, அவரைமனத்தில் நினைத்துக் கொண்டு, 108 முறை ஜெபம் செய்ய, சனி பகவானின் தீய தாக்கங்கள் குறைந்து, உடலும், மனமும் மிகுந்த சக்தி பெரும்.

ஆஞ்சநேயரை அவருக்குரிய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து வழிபடுபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக அஷ்டம சனி, ஜென்ம சனி, ஏழரை நாட்டு சனி போன்ற சனி தோஷங்களின் கடுமை குறையும்.  உடல், மன தைரியமும் அதிகரிக்கும். துஷ்ட சக்தி பாதிப்புகள் மாந்திரீக ஏவல்கள் போன்றவை முற்றிலும் ஒழியும். எதிரிகள் தொல்லை, திடீர் ஆபத்துக்கள் உண்டாகாமல் காக்கும். கல்வியில் சிறந்த தேர்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிட்டும். தொழில், வியாபாரங்கள் போன்றவற்றில் நஷ்ட நிலை நீங்கி, வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து லாபங்கள் பெருகும். தரித்திரம், வறுமை நிலை அறவே நீங்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன