சனீஸ்வரன் புகைப்படத்தை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபடலாமா என கேட்டால் வழிபடக்கூடாது என்பதே பதில்.
அவ்வாறு வைத்து வழிபடுவது நல்லதல்ல. முதலில் சனியை ஈஸ்வரன் என்று சொல்வது தவறு. சனைஸ்சரன் என்ற வார்த்தைதான் மருவி சனீஸ்வரன் என்றானது. சனைஸ்சரன் என்ற சொல்லுக்கு மெதுவாக நகர்பவன் எனப்பொருள். நவகிரகங்களை கடவுளர்களாக பாவித்து வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இறைவன் இட்ட பணியை சரிவரச் செய்யும் வேலையாட்களே நவகிரகங்கள். ஆலயத்தில்கூட அவர்களை பரிவார தேவதைகளாகத்தான் பிரதிஷ்டை செய்து வைத்திருப்பார்கள். சனி, இராகு, கேது மட்டுமல்ல குரு, சுக்கிரன் உள்பட எந்தக் கோள்களையும் வீட்டில் வைத்து பூஜிக்கக்கூடாது. அது நல்லதல்ல. ஆலயத்தில்கூட முதலில் மூலவரை வணங்கிய பின்புதான் பரிவார தேவதைகளான நவகிரகங்களுக்கு விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும்.