சகல செல்வமும் தரும் அஷ்டலட்சுமிகள்

By Staff

Published:


205d96d8667b7c5593a28c4d97a3db7a

மகாலட்சுமி என்பவள் பொருட்செல்வத்தை மட்டும் தருபவள் அல்ல.  மனித வாழ்க்கைக்குத் தேவையான எட்டுவகைச் செல்வங்களையும் அளிப்பவள். எந்த லட்சுமி என்ன தருவாள் என பார்க்கலாமா?!

146677f992ebf0aa1a2801d3849b0f1a

ஆதி லட்சுமி: இவளுக்கு ‘ரமணா’ன்ற பேரும் உண்டு. மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் தரக்கூடியவள் இவள். 

149b404ad10b7a886d37207440ec9fcd

தான்ய லட்சுமி: உயிர் வாழும் ஜந்துக்கள் அனைத்துக்கும் உணவு அவசியம். அந்த உணவை வழங்குபவள். விவசாயத்தை வளப்படுத்தும் இவளே, பசித்தவனுக்கு உணவு கிடைக்கச் செய்யும் கருணைத் தாயாகவும் திகழ்கிறாள்.

628ef723d5175c2cfc11b21375d84b22

தனலட்சுமி: உணவுக்கு அடுத்தபடியாக மனித வாழ்க்கைக்குத் தேவையானது உடை, இருப்பிடம். இவற்றை அடைய வழி செய்வது ‘தனம்’ எனப்படுகிறது.  தனம்ன்னா பொருள் செல்வம். இன்னிக்கு நாம பரவலா கும்பிடும் லட்சுமிதேவி இவள்தான். அந்த தனத்தைத் தந்தருளுபவள் இவள்.

fb485432fd376edbdc09b6092bc2995b

சந்தான லட்சுமி: குழந்தை செல்வம் இல்லன்னா எத்தனை செல்வமும் பெற்றிருந்து பலனில்லை. துணை இல்லாமல் குழந்தை இல்லை. சிறந்த வாழ்க்கைத்துணையையும்,  குழந்தைச்செல்வத்தையும் அளிப்பவள் இவளே!

6c319e3fe5290554394d10cc3aa3647b

கஜ லட்சுமி: லட்சுமிக்கு ‘க்ஷீராப்தி தனயை’ ன்னு இன்னொரு பெயருண்டு. இதற்கு பாற்கடலில் தோன்றியவள் என அர்த்தம்.  பாற்கடலில் மகாலட்சுமி தோன்றியபோது இரண்டு யானைகள் தோன்றி, தங்கள் தும்பிக்கையில் தாங்கிய பொற்குடத்தால் தேவிக்குப் பாலாபிஷேகம் செய்தன. இருபுறங்களிலும் யானைகள் நின்றதால், அவள் கஜலட்சுமி எனப்பட்டாள். இன்றும் ஆலய கர்ப்பக்கிர வாயிலிலும், வீடுகளின் வாசற்படி நிலையிலும் கஜலட்சுமி சிற்பம் இருக்கும். மனத்தூய்மையையும், மனஅமைதியையும் தருபவள் இவள்.

வித்யாலட்சுமி: அறிவாற்றல் இல்லையென்றால், எத்தனைச் செல்வங்கள் இருந்தாலும் பயனிருக்காது. அறிவாற்றல் வளர ஆதாரமாக விளங்குபவள் வித்யாலட்சுமி. உயரிய ஞானத்தை அடைய வழி செய்பவளும் இவளே! இவள் சரஸ்வதியின் அம்சம். 

8dcdac69a07c3d3b5ef741d7f1655f5c

விஜய லட்சுமி: கடுமையான முயற்சியும், உழைப்பும் நிச்சயமாக வெற்றி தரும். அந்த உழைப்புக்குரிய சக்தியைத் தந்து வெற்றியோடு வாழ அருள்புரிபவள் விஜயலட்சுமி. வெற்றிக்கு அதிபதி  இந்த தேவி. தைரிய லட்சுமி: கல்வி, செல்வம், குழந்தை, மனைவி, வீடு, வாசல் மட்டும் இருந்தால்போதுமா?!  அதை கட்டிக்காக்க தீயவர்களோடு தைரியம் வேணுமே! தர்மநெறியில் நினைத்ததைச் செய்து முடிக்க மனோபலமும், உடல்பலம், வைராக்யம், தைரியம் இவற்றை தருபவள் இந்த தைரியலட்சுமி.

இப்படி இந்த எட்டு லட்சுமிகளின் அனுக்ரகம் இருந்தால்தான் ஒருவன் எல்லா வளமும் பெற்று வாழ்வில் வெற்றி பெறமுடியும்.

Leave a Comment