திருப்பூர் அருகே உள்ள புகழ்பெற்ற கோவில் சிவன்மலை ஆண்டவர் கோவில். இங்கு சிவவாக்கியர் தவம் இருந்திருக்கிறார். இன்றும் இந்த சிவன்மலை முருகன் அமானுஷ்யமாக பக்தர்கள் வாழ்வில் பல அற்புதங்களை நிகழ்த்தி வருகிறார். இங்கு உள்ள முருகப்பெருமான் தனக்கு விருப்பமான பக்தர்களிடம் சென்று ஏதாவது ஒரு பொருளை தன் கோவிலில் வைத்து வணங்க சொல்வது வழக்கம்.
அந்த பொருள் உத்தரவு பெட்டி என்ற கோவிலில் உள்ள பெட்டியில் தினம்தோறும் வைத்து வணங்கப்படும். அடுத்த பக்தருக்கு கனவில் வந்து வேறு ஏதேனும் சொல்லும் வரை ஏற்கனவே வைத்த பொருளே தொடரும்.
யாராவது பக்தருக்கு கனவில் வந்து இது போல சொன்னால் அவர்கள் கோவில் நிர்வாகத்திடம் சொல்லி அவர்கள் பூ கட்டி போட்டு பார்ப்பது வழக்கம் நாம் சொல்வதற்கு சாதகமாக வந்தால் அந்த பொருள் பூஜையில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும்.
மஞ்சள் வைக்கப்பட்டபோது மஞ்சள் தட்டுப்பாடும், சுனாமி வந்தபோது நீரும் வைக்கப்பட்டது அந்த நேரங்களில் மஞ்சள் விலை ஏறி இருந்த நிலையில் இது போல வழிபாட்டால் கட்டுக்குள் வந்தது, அது போல தண்ணீர் வந்தபோது சுனாமி ஏற்பட்டு அதனால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட நிலையில் சில கடற்கரை பகுதிகளில் மட்டும் கடும் உயிர்ச்சேதம் ஏற்பட்டது.
தற்போது குங்குமம் வைத்து பூஜிக்கப்படுகிறது. கடந்த தாலி மஞ்சள் சரடு போன்றவை வைக்கப்பட்டு பூஜிக்கப்பட்ட நிலையில் தற்போது குங்குமம் வந்திருப்பதால் நோய் தொல்லைகள் நீங்கும். அனைத்தும் கட்டுக்குள் வரும் விரைவில் சுபமான நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.