சாதுர்யமான பெண் – திருப்பாவை பாடலும் விளக்கமும் -15

By Staff

Published:


db78a5de233b6f0478e712b92d792339

பாடல்

எல்லே! இளங்கிளியே இன்னம் உறங்குதியோ?
சில்என்று அழையேன்மின் நங்கைமீர்! போதர்கின்றேன்
வல்லைஉன் கட்டுரைகள் பண்டேஉன் வாய்அறிதும்
வல்லீர்கள் நீங்களே! நானே தான்ஆயிடுக!
ஒல்லைநீ போதாய், உனக்கென்ன வேறு உடையை!
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை மாயனைப் பாடேலோர் எம்பாவாய்.

பொருள்

தோழியே! இனிக்கும் மொழி பேசும் இளங்கிளியே! இன்னுமா உறக்கம்? ‘சத்தமிட்டு அழைக்காதீர்கள், இதோ வந்து விடுகிறேன்’ என்று கூறிவிட்டு மீண்டும் படுக்கையில் படுத்து தூக்கத்தைத் தொடர்கிறாயே? உன் சாதுர்யமான பேச்சை நாங்கள் அறிவோம். ‘அப்படியானால் ஏன் என்னை எழுப்ப வந்தீர்
கள்?’ என்று கேட்பது புரிகிறது. நாங்கள் முன்னமே வந்து உனக்காகக் காத்திருக்க வேண்டுமா? எல்லோரும் வந்து விட்டார் கள். நீயே வெளியில் வந்து எண்ணிக்கொள். வலிமைமிகுந்த யானையைக் கொன்றவனும், எதிரிகளை போரில் வீழ்த்தும் வல்லமை கொண்டவனுமாகிய மாயக் கண்ணனை வணங்கிப் போற்றுவோம்.  நீ விரைந்து வருவாய்.

விளக்கம்.. 

எத்தனை எழுப்பினாலும் மீண்டும் மீண்டும் உறங்கி விழும் பெண்ணை, அவளுடைய பேச்சு சாதுர்யத்தை மெச்சியபடி, எழுப்புவதாய் அமைந்த பாடல்.

திருப்பாவை பாடலும் விளக்கமும் தொடரும்…

Leave a Comment