நாளை முதல் ராமேஸ்வரம் கோவில் திறப்பு

By Staff

Published:

1a09f3f2b696417c78a1eb8adcca469b-1

கொரோனா வைரஸ் காரணமாக கடந்த சில மாதங்களாக அடைக்கப்பட்டு இருந்த கோவில்கள் எல்லாம் கடந்த மாதம்தான் திறக்கப்பட்டன. இந்நிலையில் கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதாக கருதப்பட்டதாலும். அத்தோடு ஆடி மாதம் சேர்ந்து கொண்டதாலும் குழப்பம் ஏற்பட்டது ஏனென்றால் ஆடி மாதம்தான் எல்லா திருவிழாக்களும் கோவில்களில் களை கட்டும். மக்கள் கூட்டம் அதிகமாக கூடும்.

முக்கியமாக ராமேஸ்வரம் கோவிலில் ஆடி அமாவாசை விழா மிக விமரிசையாக நடைபெறும். தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய அளவில் பலரும் வந்து இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சாமி தரிசனம் செய்து செல்வதால் ஆடி அமாவாசை அன்று அளவிட முடியாத அளவில் கூட்டம் இங்கு வரும்.

இந்த ஆடி அமாவாசைக்கு அதை கருத்தில் கொண்டு கொரோனா முன் எச்சரிக்கையாக கோவில் சாத்தப்பட்டது. ஆடி விசேஷங்கள் முடிந்து மற்ற கோவில்கள் திறக்கப்பட்டாலும் ராமேஸ்வரம் மட்டும் திறக்கப்படவில்லை. ஏனென்றால் ஆடி அமாவாசைக்கு தர்ப்பணம் செய்யாதவர்கள் பின் நாட்களில் கூட்டம் கூடி தர்ப்பணம் செய்ய வந்து விடுவார்கள் என்பதால் இக்கோவில் மட்டும் ஒரு வாரத்துக்கு பின் நாளைதான் திறக்கப்படுகிறது.

Leave a Comment