சபரி சாஸ்தா ஐயப்பன் கோவில் மிக புகழ்பெற்றது. சபரிமலையில் உள்ள இக்கோவிலுக்கு கார்த்திகை மாதம் ஆகி விட்டால் பக்தர்கள் மாலை அணிந்து தினசரி செல்ல ஆரம்பித்து விடுவார்கள். மிக புண்ணியம் வாய்ந்த ஷேத்திரமாக வாழ்க்கையில் ஒருமுறையாவது இங்கு சென்று விட வேண்டும் என நினைப்பவர்கள் ஏராளம்.
இந்த ஐயப்பன் கோவிலில் தற்போது இருக்கும் ஐயப்பன் சிலையை செய்து அக்கோவிலுக்கு கொடுத்தவர், தற்போதைய தமிழக நிதி அமைச்சரான பி.டி.ஆர் தியாகராஜனின் தாத்தாவான பி.டி.ராஜன் ஆவார். இவர் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர் பழனிவேல்ராஜனின் அப்பா ஆவார்.
இவர்தான் இந்த சிலையை தஞ்சை மாவட்டம் முருகனுக்குரிய ஸ்வாமி மலையில் செய்ய வைத்து அதை சபரிமலைக்கு அனுப்பி வைத்தவர் ஆவார்.
சபரிமலைக்கு சிலை செல்வதற்கு முன் இந்த சிலை பல்வேறு முக்கிய கோவில்களுக்கு சென்று பவனி செய்துதான் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. படத்தில் இந்த சிலை இருப்பது அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் பவனி வந்தபோது எடுத்தது.
இன்றும் இந்த சிலையே வழிபாட்டில் உள்ளது.