விநாயகர் சதுர்த்தி அன்று விரதம் இருக்கும் முறை!

By Staff

Published:

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று அதிகாலையில் சீக்கிரம் எழுந்து உள்ளத்தையும் உடலையும் தூய்மையாக வைத்து மனம் உருகி விநாயகரை நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும்.

     விநாயகரை மனதுக்குள் நினைத்து என்னுடைய சங்கடங்கள் அனைத்தையும் நீங்கள் தீர்க்க வேண்டும் என வேண்டி பூஜையைத் தொடங்க வேண்டும். விநாயகரிடம் சதுர்த்தி விரதத்தை மேற்கொள்ள எந்தவித தடைகளும் இல்லாமல் விரதத்தை முடிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

eafe9e0761e07ced77b6c603a43bfbe6-2

     இந்த விரதத்தின்போது பூஜையில் வைத்து இருக்கும் படையலில் நெய், சர்க்கரை மற்றும் எள் சேர்த்து செய்த கொழுக்கட்டைகளை வைக்க வேண்டும். இந்த விரதத்தின்போது ஏழைகளுக்கு அன்னதானம் செய்தால் மேன்மைகள் உண்டாகும்.

     இந்த விரதத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பவர்களுக்கு விநாயகப் பெருமான் நிச்சயம் வேண்டிய வரங்கள் அனைத்தையும் தருவார்.

Leave a Comment