செம்பு, பித்தளையால் ஆன பூஜைப்பொருட்களை வாரம் ஒருமுறை கழுவினாலும் கழுவிய ஓரிரு நாளில் நிறம் மங்கி விடுகிறது .. அப்படி நிறம் மங்காமல் இருக்க இப்படி பூஜை பாத்திரத்தினை கழுவி பயன்படுத்தி பாருங்க. வித்தியாசம் தெரியும்.
பித்தளை, செம்பு பொருட்களை எலுமிச்சம் பழத்தை இரண்டாக வெட்டி அதைக்கொண்டு பாத்திரத்தை தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து சபீனாவினால் பாத்திரத்தினை தேய்க்கவும். அல்லது சபீனா பவுடரோடு சிறிது எலுமிச்சம் பழச்சாறு பிழிந்து, தேய்த்து கழுவலாம். கழுவியபின் பியூரிபை தண்ணி, அல்லது கேன் தண்ணியால் பூஜை பாத்திரத்தை கழுவி , உடனடியாக பூஜை பாத்திரங்களை துணியால் துடைத்து சிறிது நேரம் காய வைக்கவும். பின்பு அதனை விபூதியால் துடைத்துவிட்டு பிறகு பூஜை செய்யப் பயன்படுத்தவும். இப்படி செய்தால் பூஜை பாத்திரங்கள் ஒரு மாதமானாலும் கருக்காது.