வேலூர் மாவட்டத்தில் வள்ளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலை பராமரித்து பெரிய அளவில் மக்களுக்கு தெரிய வைத்தவர் சச்சிதானந்த சுவாமிகள் அவர்கள். முருகன் வள்ளியை மணமுடித்த இடம் இந்த இடம். மிக இயற்கை எழில் சூழ அமைந்துள்ளது இந்த கோவில். இக்கோவிலை பராமரிப்பு செய்த சச்சிதானந்த ஸ்வாமிகள் ஒரு மஹான் தெய்வமே பல முறை இவருக்கு வந்து உதவி செய்துள்ளது. இவர் 1950ல் சமாதி அடைந்தார்.
வள்ளியின் சொந்த பூர்விக இடமாக இது கருதப்படுகிறது. இந்த காட்டில்தான் வள்ளியை முருகன் மணம் முடித்தான் என்பது வரலாறு. வள்ளியின் சொந்த பூமி இது என்பதால் இம்மலை முழுவதும் வள்ளி இன்றளவும் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் மலையாகவே பார்க்கப்படுகிறது.
இம்மலையையும் கோவிலையும் பாதுகாத்து வந்த சச்சிதானந்த சுவாமிகள் ஒரு முறை நடந்து சென்றபோது சிறுமி வடிவில் வந்து வள்ளி பேசிய அதிசயமும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இது கலிகால அதிசயம் ஆகும்.
இங்கு வள்ளி பொங்கி அம்மன் என அழைக்கப்படுகிறாள்.
இங்கு சென்ற உடன் வள்ளிக்கு தனி சன்னதி உள்ளது. அதை கடந்து மலைக்கு படியேறினால் 800 படி கடந்து ஒரு குகைக்குள் முருகன் குளிர்ச்சியாக காட்சி தருகிறார். சுற்றிலும் உள்ள இடங்கள் நம் மன நிலைக்கு ஏற்ற தியானம் செய்ய ஏற்ற இடங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நவராத்திரிக்கு வேலூர் வள்ளிமலை முருகன் கோவில் சென்று அம்பிகையின் அருள் பெற்று வாரீர்.
வேலூர் நகரத்தில் இருந்து இக்கோவிலுக்கு நகர பேருந்து உண்டு. அடிக்கடி இருக்காது ஒரு மணி நேர அரை மணி நேர இடைவெளியில் மட்டுமே இருக்கும்.