நவராத்திரி ஸ்பெஷல்- புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன்

By Staff

Published:

தென்மாவட்டங்களின் ஆரம்பமாக கருதப்படுவது புதுக்கோட்டை மத்திய மாவட்டமான திருச்சி நகருக்கு அடுத்த முக்கிய நகரம் இது. இந்த ஊரில் கோவில் கொண்டிருக்கிறாள் புவனேஸ்வரி அம்மன்.

9085d7c8c8e9e8171452e3cc6784e51c

இந்த அம்மன் ஊரின் காவல் தெய்வமாகவும் புதுக்கோட்டை மக்களின் நம்பிக்கைக்குரிய அம்மனாகவும் திகழ்கிறாள்.

இங்குதான் புகழ்பெற்ற மகான் ஜட்ஜ் சுவாமிகள் ஜீவசமாதி ஆகி இருக்கிறார். அவரின் அதிஷ்டானமும் அருகிலேயே உள்ளது.

சரஸ்வதி ஞான ரூபம், லட்சுமி க்ரியா ரூபம், மஹா காளி இச்சா ரூபம் – இந்த மூன்று சக்திகளும் சேர்ந்த சாமூண்டிஸ்வரி அஷ்டதச புஜ லட்சுமியாக அன்னை இங்கே வணங்கப்படுகிறாள்.

நவராத்திரி விழா இங்கே சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இங்கு அன்னைக்கு எதிரே அஷ்ட தஜ புஜ லட்சுமி இருக்கிறாள். இங்கு அஷ்ட தஜ புஜ லட்சுமிக்கு வருடத்துக்கு ஒரு முறை செய்யப்படும் மிகப்பெரும் யாகத்தால் மழை வருவதாக நம்பிக்கை மக்களிடையே உள்ளது.

இக்கோவிலில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

Leave a Comment