துர்க்கை வழிபாடு நம்மை அனைத்து பிரச்சினைகளில் துன்பங்களில் இருந்து காக்கும் என்பதில் ஐயமில்லை. ராகு, கேது தோஷங்களை நீக்குபவள் துர்க்கை என இரண்டு பதிவுகளுக்கு முன்பு கூட பார்த்தோம்.
இந்த கோவில் அம்மன் துர்க்கை சுயம்புவாக தோன்றியவள் என கூறப்படுகிறது. ஆந்திராவில் உள்ள கோவில்களில் திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக பக்தர்கள் வந்து செல்லும் கோவில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
கனகதுர்கா தேவிக்கு நவராத்திரி வைபவம் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இக்கோவில் சரஸ்வதி, பால திரிபுரசுந்தரி, மகிஷாசுரமர்த்தனி,அன்னபூரணா தேவி, காயத்ரி தேவி, ஸ்ரீ லலிதா திரிபுரசுந்தரி, காயத்ரிதேவி என ஒன்பது விதமாக கனகதுர்க்கை அலங்கரிக்கப்படுகிறாள்.
கனகதுர்க்கை புன்னகை பூத்த முகத்துடன் மிக அழகாக காட்சியளிக்கிறார். இக்கோவில் விஜயவாடாவில் கிருஷ்ணா நதிக்கரையில் உள்ளது. துர்கா சப்தஸதி மற்றும் துர்க்கை அம்மன் சம்பந்தப்பட்ட பல புராணங்களில் இக்கோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மஹாபாரதத்தில் வரும் அர்ஜூனன் இக்கோவிலில்தான் சிவபெருமானை நோக்கி தவம் இருந்ததாக கூறப்படுகிறது. நவராத்திரி சிறப்பாக கொண்டாடப்படும் இக்கோவில் சென்று துர்க்கையின் அருள் பெற்று வாருங்கள்.
தோஷ ரீதியாக அனைத்து பிரச்சினைகளில் இருந்து நம்மை நலம் பெற வைப்பதால் இவளை வணங்க ஆந்திரா மட்டுமின்றி இந்திய அளவில் மக்கள் கூட்டம் வந்து செல்கிறது.