உக்ரமூர்த்தியான ஆதிநரசிம்மர் எனச்சொல்லப்படும் அகோபில நரசிம்மர் மலைமீது அருள்பாலிக்கிறார்.
அகோபிலத்திலிருந்து 2கிமீ தூரத்தில் மலையடிவாரத்தில் இருக்கிறார் பார்க்கவநரசிம்மர். இவர் ராமரால் வழிப்பட்டவர். பார்க்கவன் என்பது ராமரின் பெயர்களில் ஒன்று.
மலைமீதே தென்கிழக்கு திசையில் 4 கிமீ யோக நிலையில் அமர்ந்திருக்கிறார் யோகானந்த நரசிம்மர். பிரகலநாதனுக்கு யோகத்தை கற்பித்தவர் இவர்.
குடைவடிவிலான கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்து அரிய வகை கல்லாலான மூர்த்தத்திலிருந்து அருள்பாலிக்கிறார் சத்ரவத நரசிம்மர். கீழ் அகோபிலத்திலிருந்து 4கிமீ தூரத்தில் உள்ளது இக்கோவில்.
இரட்டை நரசிம்மர் தலம் என்ற பெயருடன் பாபநாசினி நதிக்கரையின் கிழக்கில் லட்சுமி நரசிம்மரும்,வராக நரசிம்மரும் இருக்கிறார்கள். இங்கிருந்து வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கிடையில் உள்ள பள்ளத்தாக்கில் வராக குண்டத்திலிருந்து பாபநாசினி நதி பாய்வதை காணலாம்.
மேல் அகோபிலத்திலிருந்து 1 கிமீ தூரத்தில் கராஞ்ச மரத்தடியில், கையில் வில்லேந்தி அருள்பாலிக்கிறார் கராஞ்ச(சராங்க) நரசிம்மர்.
இவை அனைத்தும் ஆந்திர மாநிலத்தில் அமைந்திருக்கிறது.