புதன் கிழமைகளில் கீழ்க்காணும் புதன் பகவானுக்கான காயத்ரி மந்திரத்தை சொல்லி வந்தால் நரம்பு கோளாறுகள் நீங்கும். காரணம், நவக்கிரகங்களில் நரம்பு மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்துவது புதன் பகவானாகும். நரம்புகள் புத்துணர்ச்சி பெறுவதோடு, கல்வியிலும் சிறந்து விளங்கலாம்.
மந்திரம்
ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தன்னோ புத : பிரசோதயாத்
இந்த மந்திரத்தை புதன் கிழமைகளில் கோவில்களிலுள்ள புதன் பகவான் சந்நிதியிலோ அல்லது நம் இல்லத்திலோ நல்லெண்ணெய் தீபமேற்றி பச்சைப்பயிர்களால் ஆன உணவை நைவேத்தியமாய் படைத்து கற்பூர தீபம் காட்டி மேற்காணும் மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் செய்து வர நரம்பு கோளாறுகள் நீங்கும். அதோடு கல்வியும் அறிவும் மேம்படும்.