நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருபுகழூர் என்ற இடத்தில் அக்னீஸ்வர் கோவில் என்ற வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம் உள்ளது. அப்பர் இந்த கோவிலில் ஐக்கியமானதாக கூறப்படுகிறது. வேளாக்குறிச்சி ஆதினம் கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது.
இக்கோவில் வாஸ்து தலம் என கூறப்படுகிறது. இக்கோவிலில் வளர்ந்த சூலிகாம்பாள் என்ற பெண் யானை சிறு வயது முதல் இக்கோவிலில் வளர்ந்து வந்த வந்த இந்த யானை பல வருடமாக இந்த ஊர் மக்களிடம் பிரபலமாகும்.
இது 70 வயதான நிலையில் வயது மூப்பின் காரணமாக இது இறந்தது. கோவில் யானை இறந்தது பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.